கோவையில் கொலை செய்யப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு ரூ. 1 லட்சம் நிதியுதவி வழங்கினார் வேல்முருகன்

கோவை : கோவையில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உயிரிழந்த சம்பவத்தில் சிறுமியின் பெற்றோர்களுக்கு தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் ஒரு லட்ச ரூபாய் வழங்கி, ஆறுதல் கூறினார்.


கோவை : கோவையில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உயிரிழந்த சம்பவத்தில் சிறுமியின் பெற்றோர்களுக்கு தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் ஒரு லட்ச ரூபாய் வழங்கி, ஆறுதல் கூறினார். 



கோவை பன்னிமடையில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உயிரிழந்த சம்பவம் தொடர்பாக சிறுமியின் பெற்றோர்களுக்கு தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் இன்று ஆறுதல் தெரிவித்தார். பின்னர், சிறுமியின் பெற்றோரிடம் ஒரு லட்ச ரூபாய் நிதி வழங்கினார். பின்னர் அந்தப்பகுதியில் உண்மை கண்டறியும் குழுவினரிடம் பேசி தகவல்களை சேகரித்து விட்டு, பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது :- கோவை மாவட்டத்தில் சிறுமியை பலாத்காரம் செய்து கொலை செய்த சம்பவம், கூட்டு பலாத்காரம் என்பதை மருத்துவ அறிக்கை தெரிவிக்கிறது. ஆனால், ஒருவர் மீது தான் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல, குற்றவாளி அவரது பாட்டியையும் கொலை செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் உரிய விசாரணை நடத்த வேண்டும். நான் மரண தண்டனைக்கு எதிரானவன். ஆனால், பச்சிளம் குழந்தையை பலாத்காரம் செய்து கொலை செய்த இந்த குற்றவாளிக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

அதேபோல, பாதிக்கப்பட்ட குழந்தையின் குடும்பத்திற்குப் பொருளாதார உதவி செய்ய தயாராக உள்ளேன். மேலும், இந்த கொடூர சம்பவங்களால் இந்த ஆட்சியின் கீழ் வாழ வெட்கப்படுகிறேன், என தெரிவித்தார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...