கோவை : வன்னியர் மக்களின் ரத்தத்தை உறிஞ்சி பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் குடும்பம் பணக்காரர்களாக வாழ்வதாகதாகவும், வன்னியர் சங்க சொத்துகள் தொடர்பாக தன்னோடு விவாதிக்க ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் தயாரா என தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் சவால் விடுத்தார்.
கோவை : வன்னியர் மக்களின் ரத்தத்தை உறிஞ்சி பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் குடும்பம் பணக்காரர்களாக வாழ்வதாகதாகவும், வன்னியர் சங்க சொத்துகள் தொடர்பாக தன்னோடு விவாதிக்க ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் தயாரா என தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் சவால் விடுத்தார்.
கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் விடுதியில் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்போது அவர் பேசியதாவது :-
கோவை 6 வயது சிறுமி கொலை வழக்கில் நீதி கிடைக்க வேண்டும். சிறுமியின் குடும்பத்திற்கு நிதி உதவி செய்ய உள்ளது. வன்னியர் சங்க அறக்கட்டளை தொடர்பாக பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை, முழுக்க முழுக்க ஜமக்காளத்தில் வடிகட்டிய பொய். வன்னியர் சங்க அறக்கட்டளை மற்றும் மக்கள் தொலைக்காட்சி நிர்வாகிகள் தொடர்பாக ராமதாஸ் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். வன்னியர் சங்கம் ராமதாஸ் உருவாக்கியது அல்ல. 3 இலட்சம் கோடி மதிப்புள்ள வன்னியர் சங்க சொத்துகள் ராமதாசிடம் இருக்கிறது. வன்னியர் மக்களின் ரத்தத்தையும், திசுக்களையும் உறிஞ்சி ராமதாஸ் குடும்பம் பணக்காரர்களாக வாழ்கிறது. மேலும், வன்னியர் சங்க சொத்துகள் தொடர்பாக தன்னோடு விவாதிக்க ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் தயாரா..?.
30 தொகுதிகளில் தி.மு.க., கம்யூனிஸ்ட், வி.சி.க. ஆகிய கட்சிகளுக்கு ஆதரவு அளித்துள்ளது. ஆனால், காங்கிரசுக்கு ஆதரவு அளிக்கவில்லை. நோட்டோ, சீட்டோ தனக்கு தேவையில்லை. தமிழர் நலனே முக்கியம். நீட் தேர்வு விலக்கு தொடர்பாக காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையை வரவேற்கிறேன். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை மன்னித்து விடுதலை செய்வோம் என ராகுல்காந்தி அறிவிப்பார். தமிழகத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மோடியிடம் அடமானம் வைத்து விட்டது. துரைமுருகன் வீட்டில் ரெய்டு நடத்தும் அதிகாரிகள், தமிழக அமைச்சர்கள் வீட்டில் நடத்தாதது ஏன்..?. எந்த அரசியல் கட்சி தலைவரிடமும் கை நீட்டி கவர் வாங்காத அரசியல்வாதி நான். 40 தொகுதிகளிலும் பரப்புரை செய்ய தேர்தல் ஆணையம் திட்டமிட்டு அனுமதி வழங்கவில்லை.
எனக்கு சிறை உணவால் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது. பா.ம.க.வினர் சமூக வலைதளங்களினால் கேவலமாக பேசுவதால் மன அழுத்தம் ஏற்பட்டுள்ளது. தனக்கு அளிக்கப்பட்ட சிறை உணவு, சிகிச்சையில் மர்மம் இருக்கிறது, எனத் தெரிவித்தார்.