அ.தி.மு.க. ஆட்சியில் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் பாதுகாப்பில்லை : கோவை பிரச்சாரத்தில் டிடிவி தினகரன் குற்றச்சாட்டு

கோவை : அ.தி.மு.க. ஆட்சியில் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் பாதுகாப்பில்லை என கோவையில் பிரச்சாரத்தின் போது அ.ம.மு.க.வின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் குற்றச்சாட்டியுள்ளார்.


கோவை : அ.தி.மு.க. ஆட்சியில் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் பாதுகாப்பில்லை என கோவையில் பிரச்சாரத்தின் போது அ.ம.மு.க.வின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் குற்றச்சாட்டியுள்ளார்.



நீலகிரியில் நண்பகல் 12.30 மணியளவில் உதகையில் தனது பிரச்சரத்தை தொடங்கிய அவர், குன்னூர், கோத்தகிரி, மேட்டுப்பாளையம், காரமடை, பெரியநாயக்கன்பாளையம், துடியலூர், வடவள்ளி, சாய்பாபாகாலனி, ராமநாதபுரம் மற்றும் சூலூர் உள்ளிட்ட பல்வேறு முக்கிய இடங்களில், நீலகிரி, கோவை மற்றும் பொள்ளாச்சி தொகுதிகளின் அ.ம.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார். அப்போது, அவர் பேசியதாவது : முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான ஆளும் அ.தி.மு.க. அரசு, பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பில் தோல்வியடைந்துவிட்டது. 



மேலும், பாலியல் வன்கொடுமை வழக்குகளில் தலையிட்டு, சாட்சிகளை மாநில அரசு களைத்து விடுகிறது. குறிப்பாக, அண்மையில் நடந்த பொள்ளாச்சி விவகாரம் மற்றும் பன்னிமடை சிறுமி வன்கொடுமை சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை கண்டுபிடிப்பதில் அரசு மெத்தனமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.



மத்திய அரசின் கைப்பாவையாக தமிழக அரசு இருந்து வருகிறது. இதன்மூலம், மத்திய, மாநில அரசுகள் பொதுமக்கள ஏமாற்றி வருகின்றன. மேலும், முதலமைச்சர்கள உள்பட அமைச்சர்களும் மக்களை சந்திக்க பயப்படுகிறார்கள். ஏனெனில, மாநிலத்தில் ஆளும் கட்சிக்கு எதிராக ஏற்கனவே, அதிருப்தி அலைகள் வீசத் தொடங்கிவிட்டது. ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள இடைத்தேர்தலை ஒத்திவைக்க மாநில அரசு முயற்சிக்கிறது, என்றார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...