கடந்த 5 ஆண்டு கால பா.ஜ.க. ஆட்சியில் பத்திரிக்கை சுதந்திரம் பறிப்பு : திருப்பூரில் இராமகிருட்டிணன் குற்றச்சாட்டு

திருப்பூர் : கடந்த 5 ஆண்டு கால பா.ஜ.க. ஆட்சியில் பத்திரிக்கை சுதந்திரம் பறிக்கப்பட்டுள்ளதாகவும், முற்போக்கு சிந்தனையாளர்கள் எழுத்தாளர்கள் கொல்லப்பட்டிருப்பதாக திருப்பூரில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் இராமகிருட்டிணன் குற்றம்சாட்டியுள்ளார்.


திருப்பூர் : கடந்த 5 ஆண்டு கால பா.ஜ.க. ஆட்சியில் பத்திரிக்கை சுதந்திரம் பறிக்கப்பட்டுள்ளதாகவும், முற்போக்கு சிந்தனையாளர்கள் எழுத்தாளர்கள் கொல்லப்பட்டிருப்பதாக திருப்பூரில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் இராமகிருட்டிணன் குற்றம்சாட்டியுள்ளார்.



திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுகின்ற மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர் சுப்பராயனை ஆதரித்து தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் வெள்ளியங்காட்டில் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், கலந்துகொண்டு தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் இராமகிருட்டிணன் பேசியதாவது :- கடந்த 5 ஆண்டுகால ஆட்சியில் பொருளாதார நெருக்கடி மட்டுமல்ல, பண்பாட்டு கலாச்சாரத்திற்கும், மொழிக்கும் நெருக்கடி கொடுத்துள்ளனர். நீதித்துறை, ஊடகம், வருமான வரித்துறை தேர்தல் ஆணையம், பல்கலைக்கழகங்கள் என அனைத்தையும் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளனர். 

எதிர்கட்சி வேட்பாளர்களின் வீடுகளில் சோதனை மேற்கொள்ளும் வருமான வரித்துறையினர், ஏன் ஆளுங்கட்சி வேட்பாளர்களின் வீடுகளில் சோதனை மேற்கொள்வதில்லை..?. இந்தாட்சி காலத்தில் பத்திரிக்கை சுதந்திரம் பறிக்கப்பட்டுள்ளது. முற்போக்கு சிந்தனையாளர்கள் கல்புர்க்கி, தபேல்கார், கெளரி லங்கேஷ் ஆகியோர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், மீண்டும் மோடி ஆட்சியமைந்தால் அடுத்த முறை தேர்தல் நடப்பதே சந்தேகம், என தெரிவித்தார். 

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...