துரைமுருகன் வீட்டில் நடைபெற்ற வருமான வரி சோதனை ஆளுங்கட்சியின் திட்டமிட்ட சதி : உதகையில் டிடிவி தினகரன் பேட்டி

நீலகிரி : தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் வீட்டில் நடைபெற்ற வருமான வரி சோதனை ஆளுங்கட்சியின் திட்டமிட்ட சதி உதகையில் அ.ம.மு.க. பொது செயலாளர் டி.டி. வி தினகரன் தெரிவித்துள்ளார்.


நீலகிரி : தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் வீட்டில் நடைபெற்ற வருமான வரி சோதனை ஆளுங்கட்சியின் திட்டமிட்ட சதி உதகையில் அ.ம.மு.க. பொது செயலாளர் டி.டி. வி தினகரன் தெரிவித்துள்ளார்.

நீலகிரி நாடாளுமன்ற தொகுதியின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் வேட்பாளர் ராமசாமியை ஆதரித்து உதகையில் அ.ம.மு.க. துணை பொது செயலாளர் டிடிவி தினகரன் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது :- தற்போது, தமிழகத்தில் செயல்பட்டு எடப்பாடி அரசு வருமான வரி துறையை வைத்து கொண்டு எதிர்கட்சிகளை மிரட்டுகிறது. அ.தி.மு.க.வினர் வாகனங்களில் பணம் எடுத்து செல்வதை ஏன் தேர்தல் ஆணையம் தடுக்கவில்லை..?.

மேலும், மதவாத கட்சிகள் இந்த தேர்தலில் வெற்றி பெறாது. தி.மு.க.வோ ஜெயலலிதாவின் சாவில் மர்மம் இருப்பதாக பொய் பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம் மிகவும் வேதனை தருகிறது. சம்பந்தப்பட்ட ஆளுங்கட்சியினரை காப்பாற்ற இந்த அரசு முயற்சிக்கிறது. ஆர்.கே. நகர் தொகுதி தேர்தலில் அ.ம.மு.க. கட்சியின் வெற்றியில் ஓட்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் எதிர்கட்சிகள் கொடுத்தது.

மேலும், உதகையில் முக்கிய சாகுபடி ஆன பசுந்தேயிலைக்கு ரூபாய் 30 நிர்ணயம் செய்யப்படும். நீலகிரி மாவட்டத்தில் வாழும் படுகர் இன மக்களை எஸ்.டி./ எஸ்.டி. பிரிவில் சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கூடலூர் பகுதியில் நீண்டநாள் பிரச்சனையான பிரிவு 17 பிரச்சனைக்கு தீர்வு காணப்படும். நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து நடைபெறும் மனித, விலங்களுக்கு இடையேயான மோதலை தடுப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.

நீலகிரி மாவட்டத்தின் குடிநீர் பற்றாக்குறையை தீர்வு காணப்படும். கூடலூர், கக்காநல்லா தேசிய நெடுஞ்சாலை 24 மணி நேரமும் திறக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும், எனக் கூறினார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...