கோவை : கோவையில் தேர்தல் சுற்றுப்பயணம் செய்து வந்த அ.ம.மு.க. துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரனின் கார் மீது மர்ம நபர் எச்சில் துப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கோவை : கோவையில் தேர்தல் சுற்றுப்பயணம் செய்து வந்த அ.ம.மு.க. துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரனின் கார் மீது மர்ம நபர் எச்சில் துப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கோவை அ.ம.மு.க. வேட்பாளர் அப்பாதுரையை ஆதரித்து பிரச்சாரம் செய்த டி.டி.வி.தினகரனுக்கு ஒலம்பஸ் 80 அடி சாலை பழனி ஆண்டவர் வானவேடிக்கையுடன் பூரண கும்ப மரியாதையுடன் பெண்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது, அவருக்கு கோவிலில் உள்ள வேல் பரிசாக வழங்கப்பட்டது. அந்த சமயத்தில் கூட்டத்தில் நின்று கொண்டு இருந்த நபர் ஒருவர், தினகரனின் வாகனத்தை நோக்கி எச்சில் துப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. அங்கு கூடியிருந்தவர்கள் அந்த நபரை துரத்த அவர் அங்கிருந்து மாயமானார். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.