வண்டிசோலை அருகே 4-வது நாளாக பற்றி எரியும் தீ : கட்டுப்படுத்த முடியாமல் தீயணைப்புத் துறையினர் திணறல்

நீலகிரி : குன்னூர் அருகே உள்ள வண்டி சோலைப் பகுதியில் 4-வது நாளாக தொடர்ந்து எரிந்து வரும் காட்டுத் தீயை, அணைக்க முடியாமல் தீயணைப்புத் துறையினர் திணறி வருகின்றனர்.


நீலகிரி : குன்னூர் அருகே உள்ள வண்டி சோலைப் பகுதியில் 4-வது நாளாக தொடர்ந்து எரிந்து வரும் காட்டுத் தீயை, அணைக்க முடியாமல் தீயணைப்புத் துறையினர் திணறி வருகின்றனர்.



நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் மார்ச், ஏப்ரல் மற்றும் மே போன்ற கோடை மாதங்களில் மழையின் அளவு குறைந்து, கடும் வெயில் சுட்டெரிக்கும். இச்சமயங்களில் வனப்பகுதிகளில் உள்ள மரங்கள், செடி, கொடிகள் காய்ந்து கடும் வறட்சி நிலவும். ஆனால், இந்தாண்டு வழக்கத்திற்கு மாறாக, கடும் வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், வனப்பகுதிகளில் கடும் வறட்சி நிலவி வருகிறது. இதனால், ஆங்காங்கே காட்டுத்தீ ஏற்பட்டு பல ஏக்கர் வனப்பகுதிகள் தீயில் கருகி வருகின்றன.



இந்த நிலையில், குன்னூர் அருகே வண்டிசோலை வனப்பகுதியில் கடந்த 4 நாட்களாக காட்டுத்தீ எரிந்து வருகிறது. 



இதனை அணைக்க தீயணைப்புத் துறையினரும், வனத்துறையினரும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இவர்களுடன் பொதுமக்களும் இணைந்து சுமார் 40 பேர் கொண்ட குழுவாக இந்தப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும், காட்டுத் தீ தொடர்ந்து எரிந்து வருகிறது. இதனால், தீயை அணைக்க முடியாமல் தீயணைப்புத் துறையினர் திணறி வருகின்றனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...