கோவை : காந்திபுரம் அருகே உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாயை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
கோவை : காந்திபுரம் அருகே உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாயை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பறக்கும் படை அதிகாரிகள் பல்வேறு பகுதிகளிலும் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்படும் ரொக்கம் மற்றும் நகை உள்ளிட்ட பொருட்களை கைப்பற்றி வருகின்றனர். இந்த நிலையில், கோவை நாடாளுமன்ற தொகுதியில், வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெ.ஷீலா தலைமையிலான தெற்கு சட்டமன்றத் தொகுதியின் பறக்கும் படையினர் காந்திபுரத்தை அடுத்த ஜி.பி. சிக்னல் அருகே சோதனை நடத்தினர்.
அப்போது, வி.முனியசாமி என்பவர் உரிய ஆவணங்கள் ஏதும் இல்லாமல் எடுத்து வந்த ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 760 ரூபாயை பறக்கும் படையினர் கைப்பற்றினர். கைப்பற்றப்பட்ட பணம் சார்நிலை கரூவூல அலுவலகம், கோவை (தெற்கு) அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.