நீலகிரி : நீலகிரியில் அ.ம.மு.க.வின் துணைப் பொதுச்செயலாளர் தினகரன் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த போது, தொண்டர் ஒருவர் எம்.ஜி.ஆர். வேடமணிந்து சிலை போல் நின்றிருந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
நீலகிரி : நீலகிரியில் அ.ம.மு.க.வின் துணைப் பொதுச்செயலாளர் தினகரன் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த போது, தொண்டர் ஒருவர் எம்.ஜி.ஆர். வேடமணிந்து சிலை போல் நின்றிருந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
நீலகிரி (தனி) தொகுதியில் அ.தி.மு.க., தி.மு.க., மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகளை எதிர்த்து அ.ம.மு.க.வும் போட்டியிட்டுள்ளது. அக்கட்சியின் சார்பில் ராமசாமி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். இந்த நிலையில், கட்சியின் வேட்பாளரை ஆதரித்து உதகையில் டி.டி.வி. தினகரன் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, பிரச்சாரத்தில் கலந்து கொண்ட அ.ம.மு.க., தொண்டர் ஒருவர், மறைந்த முன்னாள் தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ஆர் போல் வேடமணிந்து, சிலை போல் நின்றிருந்தது அங்கிருந்த அனைவரையும் கவர்ந்தது.