கோவை : கோவை மாநகர போக்குவரத்து காவல் துணை ஆணையாளராக இருந்த சுஜித்குமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
கோவை : கோவை மாநகர போக்குவரத்து காவல் துணை ஆணையாளராக இருந்த சுஜித்குமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் விவரத்தை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜனை தமிழக அரசு அதிரடியாக பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டது. இதையடுத்து, அவர் காத்திருப்புப் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக கோவை மாநகர போக்குவரத்து காவல் துணை ஆணையாளராக இருந்த சுஜித்குமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டார்.
இந்த நிலையில், கோவை மாநகர போக்குவரத்து காவல் துணை ஆணையாளராக இருக்கும் சுஜித் குமார், இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
கோவை மாநகரில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த சுஜித் குமார் தொடர்ந்து விழிப்புணர்வு செய்து வந்துள்ளார். அதே போல, இவரின் முயற்சியால் சாலை விதிகளை மீறுவோர் மீது பொதுமக்களே நேரடியாக ஆன்லைன் மூலம் புகார் செய்ய போலீஸ் இ-ஐ என்ற செயலி அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த செயலி மூலம் தினமும் 50-க்கும் மேற்பட்ட புகார்கள் வருகிறது. அந்தப் புகார்கள் மூலம் விதிகளை மீறுவோர் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதேபோல, விபத்துகளைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில், தற்போது இவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராகப் பொறுப்பேற்றுள்ள நிலையில், பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் பாதுகாப்பிற்காக முக்கியத்துவம் கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல, பொள்ளாச்சி மற்றும் மேட்டுப்பாளையம் சாலைகளில் தனியார் பேருந்துகள் அதிவேகமாக வாகனத்தை இயக்கி விபத்து ஏற்படுத்துவதைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பார் எனவும் கோவை மாவட்ட மக்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.