ஆர்.எஸ்.புரம் பகுதியில் செப்டம்பர் இறுதிக்குள் சூயஸ் குடிநீர் திட்டப்பணிகள் நிறைவு பெறும்

கோவை : ஆர்.எஸ். புரம் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் சூயஸ் நிறுவனத்தின் குடிநீர் திட்டப் பணிகள் வரும் செப்டம்பர் மாதத்திற்குள் நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோவை : ஆர்.எஸ். புரம் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் சூயஸ் நிறுவனத்தின் குடிநீர் திட்டப் பணிகள் வரும் செப்டம்பர் மாதத்திற்குள் நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கோவை மக்களுக்கு 24 மணி நேரமும் குடிநீர் விநியோகிப்பதற்காக, பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 'சூயஸ்' என்ற நிறுவனத்துடன் ரூ. 2,961 கோடி மதிப்பில் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. அதன்படி, 21 ஆண்டுகளுக்கு கோவை மாநகராட்சிக்குட்பட்ட 16 லட்சம் குடியிருப்புகளுக்கு குடிநீர் விநியோகிக்கப்பட இருக்கிறது. மேலும், மாநகராட்சிக்குட்பட்ட 60 வார்டுகளிலும் வாரத்தின் ஏழு நாட்களிலும் 24 மணிநேரமும் சுத்தமான மற்றும் நிலையான குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.



சூயஸ் நிறுவனத்துடன் கோவை மாநகராட்சி மேற்கொண்டுள்ள இந்த ஒப்பந்தத்தின்படி, குடிநீர் விநியோகத்திற்கு தேவையான நீர்நிலைகள் மறுசீரமைப்பு, வீட்டு கனெக்ஷன், குடிநீர் மீட்டர் மற்றும் வால்வு போன்றவற்றை உள்ளடக்கி அனைத்து பணிகளையும் மேற்கொள்ளப்படும். கோவை மாநகராட்சிக்குட்பட்ட 100 கி.மீ. பரப்பளவில் சுமார் 1,50,000 இணைப்புகள் கொடுக்கப்பட இருக்கின்றன. மேலும், குடிநீர் விநியோகம் 1,200 கி.மீ வரை வழங்கப்படுகிறது. மேலும், மக்களுக்கான சேவையை மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கில், வாடிக்கையாளர் தொடர்பு மையம் மற்றும் வாடிக்கையாளர் முகவர் மையம் அமைக்கப்பட்டு, குடிநீர் விநியோகம் தொடர்பான புகார்களை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட இருக்கிறது. 



பல்வேறு திட்டங்களை உள்ளடக்கிய சூயஸ் நிறுவனம், முதற்கட்டமாக தனது குடிநீர் குழாய் பதிக்கும் பணிகளை ஆர்.எஸ்.புரத்தில் மேற்கொண்டு வருகிறது. அநேகமாக, இந்தப் பணிகள் வரும் செப்டம்பர் மாதத்திற்குள் முடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 3,953 எம்.டி.எஸ். குழாய்களில், சுமார் 1,200 குழாய்கள் பதிக்கப்பட்டு விட்டன. மேலும், தேர்வு செய்யப்பட்டுள்ள 41 குடிநீர் தொட்டிகளில், 15 தொட்டிகளின் பயன்பாட்டுத் தன்மை பற்றிய சோதனைகள் நடத்தப்பட்டு விட்டன. எஞ்சிய 26 குடிநீர் தொட்டிகளின் பரிசோதனை இந்த மாத இறுதிக்குள் முடிக்கப்பட இருக்கிறது. 

எதிர்கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் எதிர்ப்புகளுக்கு மத்தியில் 24 மணிநேர குடிநீர் விநியோகத்திட்டம் தனியார் வசம் ஒப்படைப்பதால், குடிநீர் கட்டணம் அதிகரிக்குமோ..? என்ற அச்சம் பொதுமக்களிடையே எழுந்துள்ளது. ஆனால், குடிநீர் திட்டம் மாநகராட்சியின் கட்டுப்பாட்டில்தான் இருப்பதாகவும், பராமரிப்பு மட்டுமே தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது கோவை மாநகராட்சி அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். 



"24 மணிநேர குடிநீர் விநியோகத்திட்டம் கோவை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் இருக்கும் திட்டமாகும். இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தும் பணிகள் மட்டுமே சூயஸ் நிறுவனத்திடம் வழங்கப்பட்டுள்ளது. எனவே, குடிநீர் கட்டணம் உயருமோ..? என பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம். குடிநீர் கட்டணத்தை வழக்கம் போல, மாநகராட்சி அதிகாரிகளே நிர்ணயிப்பார்கள். இதில், சூயஸ் நிறுவனமோ அல்லது வேறு எந்தவொரு யாரோ தலையிட முடியாது. ஒருவேளை மாநிலம் முழுவதும் குடிநீர் கட்டணம் அதிகரித்தால் மட்டுமே, இங்கும் அதிகரிக்கப்படும். சாதாரண கட்டணத்தை விட குறைவாகவே, கோவை மாநகராட்சியில் மேற்கொள்ளப்படும் குடிநீர் வசதிக்கான கட்டணம் சாதாரண விலை கட்டணமாகும்," என்கிறார் கோவை மாநகராட்சியின் மூத்த அதிகாரி.

மேலும், இந்தத் திட்டம் ஆரம்பத்தில் ஜவஹர்லால் நேரு தேசிய நகர புதுப்பித்தல் திட்டத்திற்கு கீழ் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால், தற்போது, அம்ரூத் திட்டத்தின் கீழ், ஸ்மார்ட் சிட்டியின் 150 கோடி பங்களிப்புடன் 24 மணிநேர குடிநீர் விநியோகத் திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முன்கூட்டியே குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகளின்படி, இந்த ஒப்பந்தம் எளிதில் ரத்து செய்ய முடியாது. ரத்து செய்தால், பெரும் நிதி இழப்பை ஏற்படுத்த நேரிடும், என அதிகாரி கூறினார். 

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...