சென்னை : 'நாட்டை உலுக்கும் ரபேல் பேர ஊழல்' என்ற தலைப்பிலான புத்தகத்தை சென்னையில் வெளியிட தேர்தல் ஆணையம் இன்று தடை விதித்துள்ளது.
சென்னை : 'நாட்டை உலுக்கும் ரபேல் பேர ஊழல்' என்ற தலைப்பிலான புத்தகத்தை சென்னையில் வெளியிட தேர்தல் ஆணையம் இன்று தடை விதித்துள்ளது.
கடந்த பா.ஜ.க. ஆட்சியில் ரஃபேல் பேர ஊழல் நிகழ்ந்ததாக எதிர்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. பா.ஜ.க.விற்கு எதிராக ஒன்று சேரும் எதிர்கட்சிகள் இந்த ரபேல் பேர ஊழல் குற்றச்சாட்டை ஆயுதமாக கையில் எடுத்துள்ளன. இந்த நிலையில், இந்த ஊழல் தொடர்பாக, ‘நாட்டை உலுக்கும் ரபேல் பேர ஊழல்’ என்ற தலைப்பில் எஸ்.விஜயன் ஒரு நூலை எழுதினார். சென்னை, பூந்தமல்லி நெடுஞ்சாலையில் தாசப்பிரகாஷ் அருகில் கேரள சமாஜத்தில் இன்று (ஏப்ரல் 2) மாலை 6 மணிக்கு இந்தப் புத்தகம் வெளியிடுவதாக இருந்தது.
இந்த நிலையில், இன்று பிற்பகலில் தேனாம்பேட்டையில் உள்ள ஒரு புத்தகக் கடைக்கு வந்த தேர்தல் அதிகாரிகள், மேற்படி புத்தகங்களை நூற்றுக்கணக்கில் பறிமுதல் செய்தனர். இன்று மாலை நடைபெறுவதாக இருந்த புத்தக வெளியீட்டு நிகழ்ச்சிக்கும் தடை விதித்தனர். தேர்தல் நடைமுறைகளை மீறி நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக அதிகாரிகள் குற்றச்சாட்டினர்.