வயநாட்டில் ராகுல் போட்டியிடுவதற்கு கேரள கம்யூனிஸ்ட் எதிர்ப்பு தெரிவிப்பது ஒற்றுமையின்மையை காட்டுகிறது : டிடிவி தினகரன் விமர்சனம்

நீலகிரி : நாடாளுமன்ற தேர்தலில் வயநாடு தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி போட்டியிடுவதற்கு, கேரள கம்யூனிஸ்ட் எதிர்ப்பு தெரிவித்து இருப்பது ஒற்றுமை இல்லாததைக் காட்டுவதாக அ.ம.மு.க. துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்தார்.


நீலகிரி : நாடாளுமன்ற தேர்தலில் வயநாடு தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி போட்டியிடுவதற்கு, கேரள கம்யூனிஸ்ட் எதிர்ப்பு தெரிவித்து இருப்பது ஒற்றுமை இல்லாததைக் காட்டுவதாக அ.ம.மு.க. துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்தார். 

நீலகிரியில் செய்தியாளர்களை சந்தித்த அ.ம.மு.க. துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியதாவது :- மக்களவை மற்றும் சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்த பட்டியலை கடந்த மாதம் 14ஆம் தேதி சின்னம்மாவிடம் பேசி முடிவு எடுக்கப்பட்டது. மேலும், வயநாட்டில் ராகுல்காந்தி போட்டியிடுவதில் கேரள கம்யூனிஸ்ட் எதிர்ப்பு தெரிவிப்பது ஒற்றுமை இல்லாததைக் காட்டுகிறது.



18 தொகுதிகளில் சட்டப்பேரவையில் போட்டியிடும் டிடிவி தினகரன் வேட்பாளர்களின் வீடுகளின் பணத்தை வைத்து, அதன் மூலம் வருமான வரித்துறை சோதனை மூலம் தேர்தலை நிறுத்த ஆளும் கட்சி முயற்சிக்கிறது. மதுரை ஆதீனம் யாருக்காக இப்படி செயல்படுகிறார் என்பதை விரைவில் கண்டுபிடித்து, அவர் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் தேர்ந்தெடுக்கப்படும் மக்களவை உறுப்பினர்கள் இணைந்துதான் பிரதமர் வேட்பாளரை தேர்ந்தெடுப்பார்கள். எதிர்க்கட்சிகள் செயல்படாமல் இருப்பதற்காக தான் ஒவ்வொரு வீடுகளிலும் ஆளுங்கட்சி தரப்பில் வருமான வரி சோதனை நடைபெறுகிறது. ஆர்.கே. நகரில் வாக்கிற்கு ரூ. 6 ஆயிரம் வரை கொடுத்து விட்டு, அங்கு தோல்வியை சந்தித்த அ.தி.மு.க., தி.மு.க.,வினர், தற்போது எங்கள் மீது குற்றம்சாட்டுகிறார்கள், எனக் கூறினார். 

இதைத் தொடர்ந்து, உதகையில் டிடிவி தினகரன் வாகனப் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, அவர் கூறியதாவது :- நீலகிரியில் பல்நோக்கு மருத்துவமனை உருவாக்கப்படும். செக்ஷன் 17 நிலப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படும். குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்தப்படும். அம்மாவின் தொண்டர்கள் 95 சதவீதம் பேர் அ.ம.மு.க.வில் உள்ளார்கள். தேர்தலுக்குப் பின் பழனிசாமி ஆட்சி விரைவில் முடிவுக்கு வரும், எனக் கூறினார். 

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...