கோவை : கோவை ராஜவீதி அருகே உள்ள தேர்முட்டியில் 1 கிலோ தங்க நகைகள் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டதையடுத்து, வருமானவரி துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை : கோவை ராஜவீதி அருகே உள்ள தேர்முட்டியில் 1 கிலோ தங்க நகைகள் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டதையடுத்து, வருமானவரி துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, பறக்கும் படை அதிகாரிகள் கோவை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் கணக்கில் வராத பணங்கள், தங்கங்கள் போன்ற பொருட்களை கைப்பற்றி வருகின்றனர்.
இந்த நிலையில், இன்று பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ராஜவீதி பகுதியில் தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக வந்த காரை மறித்து சோதனை செய்தனர். அதில், 1 கிலோ அளவிலான தங்க நகைகள் இருப்பதை அடுத்து அனைத்தையும் பறிமுதல் செய்தனர்.

மேலும், அவர்களிடம் விசாரணை நடத்தியபோது, கீர்த்திலால் காளிதாஸ் நகை கடைக்கு சொந்தமான நகை என தெரிவித்தனர். இதையடுத்து, ஓட்டுனர் வீரய்யன் மற்றும் கடை ஊழியர் நித்தின் ஆகியோரை அதிகாரிகள் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு அழைத்து வந்தனர்.
மேலும், 979 கிராம் நகைள் இருந்ததும், நகை செய்யும் இடத்தில் இருந்து நகைகள் கொண்டு செல்வதாகவும் தெரிவித்தனர். ஆனால், உரிய ஆவணங்கள் இல்லாததால் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டு கோட்டாட்சியர் அலுவலர் தனபாலன் ஒப்படைத்தனர். அதன்பின்னர், வருமானவரி துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்து அதிகாரிகள் நேரில் வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.