கோவை : கோவையில் உரிய ஆவணம் இல்லாமல், கொண்டு செல்லப்பட்ட 4.5 டன் கோதுமையை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
கோவை : கோவையில் உரிய ஆவணம் இல்லாமல், கொண்டு செல்லப்பட்ட 4.5 டன் கோதுமையை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

கோவையை அடுத்த வீர கேரளம் பகுதியில் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தி வந்தனர். அப்போது, அப்பகுதியில் வந்த லாரியை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர். அதில், லாரியில் உரிய ஆவணமில்லாமல் கோதுமை கொண்டு வரப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து, உரிய ஆவணம் இல்லாமல், கொண்டு சென்ற 4.5 டன் கோதுமையை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட லாரியை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிறுத்தி வைத்துள்ளனர்.