கோவை பூமார்க்கெட் பகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர் மகேந்திரன் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை : நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, கோவை பூமார்க்கெட் பகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர் மகேந்திரன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.


கோவை : நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, கோவை பூமார்க்கெட் பகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர் மகேந்திரன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.



நாடாளுமன்ற தேர்தலில் கோவை தொகுதியில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் மகேந்திரன் போட்டியிடுகிறார். வேட்பு மனு தாக்கல் செய்ததில் இருந்து, ரேஸ்கோர்ஸ், துடியலூரில் பொதுமக்களை நேரில் சந்தித்து வாக்கு சேகரித்தார். 

.



இந்தநிலையில், இன்று காலை பரபரப்பான நேரத்தில் சாய்பாபா காலனியில் உள்ள பாரதி பார்க் பகுதியில் பிரச்சாரத்தை தொடங்கினார். பின்னர், பூமார்க்கெட் பகுதியில் வாக்காளர்களை சந்தித்து அதற்கு திரட்டினார். 



அப்போது, கட்சியின் கொள்கைகளையும், கோவை நகரின் மேம்பாட்டு திட்டங்களை பற்றியும் அவர் விளக்கிக் கூறினார். மேலும், ‘தமிழகத்தை வழிநடத்தும் கோவை’ என்ற நோக்கில் செயல்படும் மக்கள நீதி மய்யத்திற்கு ஆதரவு தர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். 



அதோடு, பூமார்க்கெட்டின் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படுவதுடன், அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தரப்படும் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர் மகேந்திரன் உறுதியளித்தார்.



இதனிடையே, மக்கள் நீதி மய்யத்தின் தொண்டர்கள் கட்சியின் கொள்கைகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கி, மாற்றத்தை உருவாக்க வாய்ப்பு தாருங்கள் எனக் கேட்டுக் கொண்டனர். மேலும், மக்கள நீதி மத்யத்தின் தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றித் தரப்படும் என உறுதியளித்தனர். கோவையில் வரும் 5-ம் தேதி மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் பிரச்சாரம் மேற்கொள்ள இருப்பது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...