கோவை : நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு அமித்ஷா, ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் முக்கிய தலைவர்கள் கோவையில் இன்று பிரச்சாரம் செய்கின்றனர்.
கோவை : நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு அமித்ஷா, ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் முக்கிய தலைவர்கள் கோவையில் இன்று பிரச்சாரம் செய்கின்றனர்.
கோவையில் நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில், பா.ஜ.க., அ.தி.மு.க. கூட்டணியின் வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணனை ஆதரித்து துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அவரைத் தொடர்ந்து, இன்று மாலை சிவனந்தா காலனியில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பா.ஜ.க.தேசிய தலைவர் அமித்ஷா பங்கேற்று, சி.பி.ஆருக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கிறார்.
இதேபோல, அ.ம.மு.க.வின் துணை பொது செயலாளர் டிடிவி தினகரன், தனது கட்சியின் வேட்பாளர் அப்பாதுரையை ஆதரித்து பிரச்சாரம் செய்கிறார். இதைத்தொடர்ந்து, பொள்ளாச்சி மற்றும் நீலகிரி வேட்பாளர்களுக்கும் ஆதரவாக வாக்குசேகரிக்க உள்ளார். இதனிடையே, மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் நீலகிரி வேட்பாளர் ஆ.ராசாவுக்கு ஆதரவாக மேட்டுப்பாளையத்தில் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் இன்று பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார்.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில், பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் ஒரே நாளில் முகாமிட்டு இருப்பதால், இன்று கோவை மாவட்டம் பரபரப்பாகவே காணப்படும்.