கோவை கூட்டணி கட்சி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணனை ஆதரித்து ஓ.பி.எஸ். பிரச்சாரம் : ஓ.பி.எஸின் வருகை தாமதத்தால் அவதிக்குள்ளான மக்கள்

கோவை : கோவை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணனை அதிகரித்து பிரச்சாரம் செய்வதற்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாமதமாக வந்ததால், போக்குவரத்து நெரிசலில் சிக்கி பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.


கோவை : கோவை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணனை அதிகரித்து பிரச்சாரம் செய்வதற்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாமதமாக வந்ததால், போக்குவரத்து நெரிசலில் சிக்கி பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.



கோவை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணனை அதிகரித்து துணை முதல்வர் ஓ.பி.எஸ் பிரச்சாரம் செய்ய வருவதையொட்டி ஒலம்பஸ் பகுதியில் அக்கட்சியினர் குவிந்தனர். காலை 10 மணிக்கு பிரச்சாரம் மேற்கொள்வார் என அறிவிக்கபட்ட நிலையில், காலை 9 மணி முதலே கட்சியினர் 80 அடி சாலையில் கூட துவங்கினர். இதனிடையே, மக்கள் கலைந்து செல்லக் கூடாது என்பதற்காக இதோ வருகிறார் வந்துவிட்டார் என ஒலி பெருக்கியில் அறிவித்து கொண்டு இருந்தனர். ஒரு கட்டத்தில் இரு வழி பாதையில் அனுமதிக்கபட்ட வாகனங்களை ஒரு வழி பாதையில் போலீசார் அனுமதித்தனர்.

பின்னர் கட்சியினர் சாலையின் நடுவே சென்று நின்றதால் போக்குவரத்தை சரி செய்ய காவல் துறையினர் திணறினர். மேலும், சுங்கம் வழியாக வரும் வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றது. ஒலம்பஸ் பகுதியில் பேருந்து நிலையத்தில் பேருந்து கிடைக்காமல் பயணிகள் நீண்ட நேரம் காத்திருந்து அவதிக்கு உள்ளாகினர். ஒரு கட்டத்தில் கூட்டத்தில் வந்திருந்தவர்கள், துணை முதலமைச்சர் எப்போது வருவார் என கேள்வி எழுப்ப தொடங்கினர். இதே இன்னும் சிறிது நேரத்தில் வந்து விடுவார் என அவர்களை சமாதனம் செய்தனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...