பா.ஜ.க.வேட்பாளர் சி.பி.ஆரை ஆதரித்து கோவையில் இன்று அமித்ஷா பிரச்சாரம்

கோவை : நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டுள்ள பா.ஜ.க. வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணனை ஆதரித்து அக்கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா இன்று கோவையில் பிரச்சாரம் செய்கிறார்.


கோவை : நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டுள்ள பா.ஜ.க. வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணனை ஆதரித்து அக்கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா இன்று கோவையில் பிரச்சாரம் செய்கிறார்.

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் மற்றும் காலியாக உள்ள 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வருகிற ஏப்ரல் 18-ம் தேதி நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தலில் அ.தி.மு.க., பா.ஜ.க., பா.ம.க. மற்றும் தே.மு.தி.க., ஆகிய கட்சிகள் ஒன்றிணைந்து மாபெரும் கூட்டணியை அமைத்துள்ளன. இதையடுத்து, தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. பல்வேறு கட்சிகளின் தலைவர்களும், தமிழகத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், மக்களவைத் தேர்தல் பிரசாரத்திற்காக தமிழகம் வரும் பா.ஜ.க. தேசிய தலைவர் அமித் ஷா இன்று 3 பொதுக்கூட்டங்களில் பங்கேற்று பேச உள்ளார்.

தூத்துக்குடியில் இன்று காலை 11 மணிக்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பா.ஜ.க. வேட்பாளர் தமிழிசைக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க உள்ளார். இதனைத் தொடர்ந்து, சிவகங்கை மற்றும் கோவையிலும் பா.ஜ.க. வேட்பாளர்கள் எச். ராஜா மற்றும் சி.பி.ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கு ஆதரவாக அமித் ஷா வாக்கு சேகரிக்க உள்ளார். கோவை சிவானந்த காலனியில் மாலை 5 மணிக்கு நடக்கும் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று, சி.பி. ஆரை ஆதரித்து அமித்ஷா வாக்கு சேகரிக்கிறார்.

தொடர்ந்து 13 மற்றும் 14-ம் தேதிகளில் நடைபெறும் பா.ஜ.க. பொதுக்கூட்டங்களில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடியும், மத்திய அமைச்சர் நிதின் கட்கரியும் தமிழகம் வர உள்ளானர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...