பிரபல திரைப்பட இயக்குநர் மகேந்திரன் உடல்நலக்குறைவால் காலமானார்

முள்ளும் மலரும் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களின் மூலம் மக்களை கவர்ந்த பிரபல திரைப்பட இயக்குநர் மகேந்திரன் உடல்நலக்குறைவால் இன்று காலை காலமானார்.



முள்ளும் மலரும் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களின் மூலம் மக்களை கவர்ந்த பிரபல திரைப்பட இயக்குநர் மகேந்திரன் உடல்நலக்குறைவால் இன்று காலை காலமானார்.

அலெக்ஸாண்டராக பிறந்த மகேந்திரனை அவரது பேச்சால் கவர்ந்த எம்.ஜி.ஆர், திரைத்துறைக்கு அழைத்து வந்தார். ஆரம்ப காலத்தில் திரைப்படங்களுக்கு கதை வசனம் மட்டுமே எழுதி வந்த மகேந்திரன் இயக்கிய முதல் படமான ‘முள்ளும் மலரும்’ இன்று வரை தமிழ் சினிமா கண்ட சிறந்த படைப்புகளுள் ஒன்றாகப் போற்றப்படுகிறது.

தொடர்ந்து, மகேந்திரன் இயக்கத்தில் வெளியான உதிரிப்பூக்கள், நெஞ்சத்தை கிள்ளாதே, மெட்டி, நண்டு, ஆகிய படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றன. மேலும், தமிழ் சினிமாவை அடுத்த தளத்திற்கு முன்னேற்றியதில் இயக்குநர் மகேந்திரனின் படங்களுக்கு என்றுமே தனி இடம் உண்டு. 

ஆரம்பத்தில் பல திறமையான நடிகர்களை உருவாக்கிய மகேந்திரன், இன்று அவரே பல படங்களில் வில்லனாகவும் குணச்சித்திர நடிகராகவும் மிரட்டி வந்தார்.தெறி படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்து மிரட்டிய இயக்குநர் மகேந்திரன், கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய பேட்ட படத்திலும் ரஜினிகாந்துடன் நடித்திருந்தார். மேலும், விஜய்சேதுபதியுடன் சீதக்காதி படத்தில் வழக்கறிஞர் கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார். 79 வயதாகும் மகேந்திரன் தற்போது உடல் நலக்குறைவால் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வந்தார். சில தினங்களுக்கு முன் அவரது மகன் ஜான் மகேந்திரன் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘அப்பாவுக்காக பிரார்த்தியுங்கள்’ என்று பதிவிட்டிருந்தார்

இந்நிலையில், இன்று காலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இந்தச் செய்தியை அவருடைய மகன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...