திருப்பூர் : பிரதமராக ராகுல் வந்தால் நீட் தேர்வு ரத்து செய்யப்படும், கச்சத்தீவு மீட்கப்படும் என ஸ்டாலின் அளிக்கும் வாக்குறுதிகளை, கங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கொடுப்பாரா..? என திருப்பூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
திருப்பூர் : பிரதமராக ராகுல் வந்தால் நீட் தேர்வு ரத்து செய்யப்படும், கச்சத்தீவு மீட்கப்படும் என ஸ்டாலின் அளிக்கும் வாக்குறுதிகளை, கங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கொடுப்பாரா..? என திருப்பூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் திருப்பூர் நாடாளுமன்ற வேட்பாளர் ஜெகநாதனை ஆதரித்து பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. இதில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது : எத்தனை தேர்தல் நடந்தாலும் எந்த மாறுதலும் நடக்கவில்லை. தற்போது, கூட்டணி என்ற பெயரில் அமைந்திருப்பது அணிகள் அல்ல. மக்களுக்கு பிடித்துள்ள சனி. அது ஒழிய வேண்டும். மேலும், பிரதமராக ராகுல் வந்தால் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என ஸ்டாலின் சொல்கிறார். ஆனால் , அதை ராகுலால் சொல்ல முடியுமா..?. அதேபோல, கச்சத்தீவை மீட்போம் என ஸ்டாலின் சொல்வதை போல ராகுல் சொல்வாறா..?.

கோடிகளை வைத்து நாங்கள் தேர்தலை சந்திக்கவில்லை. உயர்ந்த கொள்கைகளை வைத்து தேர்தல சந்திக்கிறோம். நாம் தற்போது கற்கும் கல்வி என்பது வியாபார கல்வி. பணமதிப்பிழப்பால் ஏற்பட்ட பாதிப்பை மக்கள் மறந்துவிட கூடாது. இந்த நடவடிக்கையால் பல ஆயிரம் குடும்பங்கள் நாசமாகி போயின.
பாகிஸ்தான் பக்கத்து நாடாக இல்லாவிட்டால் பா.ஜ.க.விற்கு பாலிடிக்ஸ் என்பதே கிடையாது. காவலாளியிடம் இருந்து நாட்டை பாதுகாக்க வேண்டிய தேர்தல் இது. இந்த 5 ஆண்டுகளில் மோடி அதானி, அம்பானிக்கு தரகராக இருந்தார். தற்போது, நடப்பது தலைவருக்கான தேர்தல் அல்ல. உள்நாட்டு, வெளிநாட்டு பெரும் முதலாளிகளுக்கான தரகர்களை தேர்ந்தெடுக்க நடக்கும் தேர்தல். இந்த நிலையை மாற்றி நல்ல தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலாக மக்கள் மாற்ற வேண்டும். மேலும், பணம் கொடுத்து வாக்கு வாங்கி அதிகாரத்திற்கு வந்து, மக்களுக்கே சேவை செய்யும் அளவிற்கு நல்லவர்களா இவர்கள்..?. பணம் கொடுக்க வருபவர்களை மக்கள் விரட்டியடுக்க வேண்டும். ஓட்டுக்கு காசு கொடுக்காமல் எந்த கட்சியாவது நாம் தமிழர் கட்சியை எதிர்த்து நின்று வெல்ல முடியுமா..?, என்று அவர் சவால் விடுத்தார்.