கோவை : வெள்ளலூர் குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணிகள் முழுமையாக முடிவுற்ற நிலையில், குப்பைகளை குவியலாகப் பிரிக்கும் பணிகளை கோவை மாநகராட்சி ஆணையர் ஸ்ரவன்குமார் ஜடாவத் ஆய்வு செய்தார்.
கோவை : வெள்ளலூர் குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணிகள் முழுமையாக முடிவுற்ற நிலையில், குப்பைகளை குவியலாகப் பிரிக்கும் பணிகளை கோவை மாநகராட்சி ஆணையர் ஸ்ரவன்குமார் ஜடாவத் ஆய்வு செய்தார்.
கோவை மாநகராட்சிக்குட்பட்ட வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் கடந்த 23-ம் தேதி மாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. காற்று அதிகமாக இருந்ததால் தீ மளமளவென கொளுந்துவிட்டு எரிந்தது. இதைத் தொடர்ந்து, மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ஷ்ரவன் குமார் ஜடாவத்தின் துரித நடவடிக்கையின் பேரில், தீயணைப்புத் துறை மற்றும் மாநகராட்சி அலுவலர்களால் தீ அணைக்கப்பட்டது.
வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் தீ அணைக்கும் பணிகள் முழுமையாக முடிவுற்றதைத் தொடர்ந்து, குப்பைகள் தேக்கி வைக்கும் பகுதிகளில் வழிகள் ஏற்படுத்தி குவியலாகப் பிரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனை கோவை மாநகராட்சி ஆணையர் ஸ்ரவன்குமார் ஜடாவத் பார்வையிட்டார். அவருடன், மாநகரப் பொறியாளர் ஆ. லட்சுமணன் மற்றும் அலுவலர்கள் இருந்தனர்.