கோவை : ஏப்ரல் ஒன்றாம் தேதியை மனித முட்டாள் தினமாக அல்லாமல், இயற்கை வள மேம்பாட்டு நாளாக கொண்டாட வலியுறுத்தி மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.
கோவை : ஏப்ரல் ஒன்றாம் தேதியை மனித முட்டாள் தினமாக அல்லாமல், இயற்கை வள மேம்பாட்டு நாளாக கொண்டாட வலியுறுத்தி மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.

ஏப்ரல் மாதம் முதல் நாளை முட்டாள்கள் தினமாக கொண்டாடுவது வழக்கத்தில் உள்ளது. சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை ஏப்ரல் ஒன்றாம் தேதியினை ஒருவருக்கொருவர் மற்றொருவரை ஏதேனும் ஒருவகையில் முட்டாளாக மாற்றுவதில் மகிழ்ச்சியடைந்து வருகின்றனர். இதனை மாற்றும் வகையில், முட்டாள்கள் தினத்தை இயற்கை மேம்பாட்டு தினமாக கொண்டாடி மகிழ வலியுறுத்தி கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் கல்லார் சச்சிதானந்தா பன்னாட்டு பள்ளி மாணவ, மாணவியர் சேர்ந்து ஆயிரம் மரக்கன்றுகளை நட்டு மகிழ்ந்தனர்.

இந்த நிகழ்ச்சியில் பள்ளி செயலாளர் கவிதாசன் மற்றும் முதல்வர், ஆசிரியர்கள் உட்பட மாணவர்கள் கலந்து கொண்டனர்