கோவை : நீலகிரி மற்றும் கோவையில் போட்டியிடும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தி.மு.க. தலைவர் ஸ்டாலின் நாளை முதல் 2 நாட்கள் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
கோவை : நீலகிரி மற்றும் கோவையில் போட்டியிடும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தி.மு.க. தலைவர் ஸ்டாலின் நாளை முதல் 2 நாட்கள் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
சென்னையில் இருந்து விமானம் மூலம் நாளை காலை 10.45 மணிக்கு கோவை வரும் ஸ்டாலினுக்கு அக்கட்சியின் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்துள்ளனர். இதைத் தொடர்ந்து, அங்கிருந்து கோவை - மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள டீச்சர்ஸ் காலனியில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கும் அவர், நீலகிரி வேட்பாளர் ஆ.ராசாவை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்கிறார். பின்னர், இரவு கோவை பீளமேடு பகுதியில் உள்ள தனியார் ஓட்டலில் தங்குகிறார்.

தொடர்ந்து, நாளை மறுதினம் கொடிசியா மைதானத்தில் நடைபெற உள்ள பிரம்மாண்ட பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு, மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் பி.ஆர். நடராஜனுக்கு ஆதரவாக உரையாற்றுகிறார். இதில், கூட்டணி கட்சியை சேர்ந்த தலைவர்கள் பங்கேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்காக, கோவை கொடிசியா மைதானத்தில் பிரம்மாண்டமான மேடை அமைக்கப்பட்டுள்ளது.