கோவை : முன்விரோதம் காரணமாக ஈரோடு அருகே ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 5 பேர் கோவை குற்றவியல் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.
கோவை : முன்விரோதம் காரணமாக ஈரோடு அருகே ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 5 பேர் கோவை குற்றவியல் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.
ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையத்தில் முன்விரோதம் காரணமாக ரமேஷ் என்கிற பிரகலநாதன் என்பவர் கடந்த 29-ம் தேதி மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்த விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், இந்த கொலை வழக்கு தொடர்பாக, கோவை 8-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் குமார், கௌதம், கலைச்செல்வன், குணசேகரன் மற்றும் பாலமுருகன் என்ற 5 பேர் இன்று சரணடைந்தனர்.
இதையடுத்து, சரண் அடைந்த 5 பேரையும் வரும் 4-ம் தேதி வரை கோவை மத்திய சிறையில் அடைக்க நீதிபதி பாலமுருகன் உத்தரவிட்டார். மேலும், 4-ம் தேதி ஈரோடு நீதிமன்றத்தில் அவர்களை ஆஜர்படுத்தவும் நீதிபதி ஆணை பிறப்பித்தார்.