உதகையில் சுற்றுலா மேக்ஸி கேப் வாகன ஓட்டுநர்களின் ஸ்டிரைக் இன்று முதல் தொடக்கம்

நீலகிரி : மத்திய, மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில், சுற்றுலா மேக்ஸி கேப் வாகனங்களின் ஓட்டுநர்கள் இன்று முதல் 7-ம் தேதி வரை நடக்கும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


நீலகிரி : மத்திய, மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில், சுற்றுலா மேக்ஸி கேப் வாகனங்களின் ஓட்டுநர்கள் இன்று முதல் 7-ம் தேதி வரை நடக்கும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 



சுற்றுலா நகரமான உதகையில் நாள்தோறும் சுற்றுலாப் பயணிகள் ஆயிரக்கணக்கில் வந்து செல்கின்றனர். இவர்கள் உள்ளூர் பகுதிகளில் உள்ள சுற்றுலா தலங்களை சுற்றி பார்க்க ஏதுவாக, சுற்றுலா வாகனங்கள் இயக்கும் ஓட்டுநர்கள் தங்களது வாகனங்களில் சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் செல்கின்றனர். இப்படியிருக்க, சுற்றுலா வாகனங்களை காவல்துறையினர் சோதனை செய்வது தொடர்ந்து நடைபெற்று வருவதால், பல இன்னல்களுக்கு ஆளாவதாக தெரிவிக்கின்றனர் வாகன ஓட்டிகள்.

"குறிப்பாக, நகரப்பகுதியில் வாகனங்களை இயக்கும் பொழுது குறிப்பிட்ட அளவிற்கு ஒரு முறை காவலர்கள் சோதனை செய்வது மிகவும் வேதனை அளிக்கிறது. இப்படி வாகன சோதனை செய்யும் பொழுது சுற்றுலா செல்ல நிர்ணயிக்கப்பட்ட இடத்தை விடகுறைவான இடங்களில் சுற்றுலாப் பயணிகளுக்குக் காண்பிக்க வேண்டியுள்ளது. அதனால். சுற்றுலாப் பயணிகள் தங்கள் வாகனங்களை இயக்கும் பொழுது, வாகனம் மீது ஏதாவது தவறு உள்ளதா..? என எண்ணுகின்றனர்," என்கின்றனர் சுற்றுலா வாகன ஓட்டுநர்கள்.



மேலும், அவர்கள் கூறியதாவது :- ஒரு வாகனத்தில் 12 இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கும் போலீசார், 18 இருக்கைகளுக்கு அனுமதி வழங்குமாறு கோரிக்கைகள் விடுத்துள்ளோம். கடந்த நான்கு ஆண்டுகளாக இந்த நடைமுறையை அமல்படுத்துமாறு எங்கள் சார்பாக நாங்கள் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறோம். சரியான ஆவணங்கள் நாங்கள் வைத்திருந்தும், ஒரு சில இடங்களில் எங்களுக்கு உண்டான அபராதத் தொகையை செலுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது. ஆகவே, தங்களின் வாழ்வாதாரங்கள் மிகவும் பாதிப்படைந்துள்ளது, என சுற்றுலா வாகன ஓட்டிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

எனவே, இப்பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வு காணும் பொருட்டு, மத்திய, மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் விதமாக, இன்று மாலை தொடங்கிய வேலைநிறுத்தப் போராட்டம், வரும் 7-ம் தேதி வரை நடக்கவுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...