சிறுமி கொலை வழக்கு குற்றவாளி டி.ஒய்.எஃப்.ஐ.ச் சேர்ந்தவர் என தகவல் பரப்புவோர் மீது நடவடிக்கை கோரி மனு

கோவை : கோவையில் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கின் முக்கிய குற்றவாளி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தைச் சேர்ந்தவர் என தகவல் பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது.


கோவை : கோவையில் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கின் முக்கிய குற்றவாளி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தைச் சேர்ந்தவர் என தகவல் பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது. 

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் கே.எஸ்.கனகராஜ், மாவட்ட துணைச் செயலாளர் துரைசங்கர் மற்றும் மாவட்டக்குழு உறுப்பினர் ராஜா உள்ளிட்டோர் காவல்துறையில் மனு ஒன்றை அளித்தனர். 

அந்த மனுவில் கூறியிருப்பதாவது :- கோவை துடியலூர் அருகே பாலியல் வன்கொடுமை செய்து சிறுமி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் சந்தோஷ் குமார் குற்றவாளி என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது. அவரை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தோடு தொடர்புபடுத்தி சிலர் சமூக வலை தளங்களில் தகவல் பரப்பி வருகின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோவை மாநகர காவல் துறை துணை ஆணையரிடம் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...