கோவை : கோவை வனப்பகுதிக்குட்பட்ட வேட்டை தடுப்பு காவலர்கள் மற்றும் அதிவிரைவு படையினருக்கும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் வாழ்நாள் காப்பீடு செய்யப்பட்டுள்ளது.
கோவை : கோவை வனப்பகுதிக்குட்பட்ட வேட்டை தடுப்பு காவலர்கள் மற்றும் அதிவிரைவு படையினருக்கும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் வாழ்நாள் காப்பீடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு கோவை வனப்பகுதிக்குட்பட்ட 136 வேட்டை தடுப்பு காவலர்களுக்கு மேற்கு தொடர்ச்சி மலை பாதுகாப்பு அறக்கட்டளையின் சார்பில் வாழ்நாள் காப்பீடு திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நிலையில், இந்த ஆண்டு அதிவிரைவு படையினரும் இந்தத் திட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்டுள்ளனர். இதன்மூலம், 10 பேர் பயனடைய உள்ளனர்.
இந்தக் காப்பீடு திட்டத்தின் மூலம் ரூ. 1 லட்சம் வரை மருத்துவ சிகிச்சையும், ஒருவேளை இறப்பு ஏற்பட்டால் ரூ. 1.5 லட்சம் வரையில் இழப்பீடும் பெற முடியும். இந்த திட்டத்தில் 6 வேட்டை தடுப்பு காவலர்களும், 10 அதிவிரைவு படையினரும் என மொத்தம் 146 பேர் பயனடைகின்றனர். இந்த திட்டத்திற்கான தொகையை மேற்கு தொடர்ச்சி மலை பாதுகாப்பு அறக்கட்டளை செலுத்துகிறது.
இந்த நிலையில், வேட்டை தடுப்பு காவலர்கள் மற்றும் அதிவிரைவு படையினருக்கும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் வாழ்நாள் காப்பீடு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட வன அதிகாரி டி. வெங்கடேஷ் பேசுகையில், "முதற்கட்டமாக, வங்கியில் அனைத்து ஊழியர்களுக்கும் ஊதியக் கணக்கு தொடங்கப்பட்டது. ஒருசிலருக்கு, ஏற்கனவே எஸ்.பி.ஐ.யில் ஊதியக் கணக்கு இருப்பதால், அதோடு இந்த காப்பீடு திட்டம் இணைக்கப்பட்டு விட்டது. ஆண்டுதோறும் வங்கியில் இருந்து காப்பீட்டுக்கான பிரீமியம் தொகையாக ரூ. 500 ஒவ்வொருவரின் கணக்கில் இருந்து பிடித்தம் செய்யப்படும்," என்றார்.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் காட்டு யானை தாக்கி உயிரிழந்த அதிவிரைவு படை வீரர் வெங்கடேஷின் குடும்பத்திற்கு இழப்பீடாக ரூ. 8 லட்சம் வழங்கப்பட்டது. இதனை ரூ. 10 லட்சமாக அதிகரித்து வழங்குமாறு அதிகாரிகளுக்கு சக ஊழியர்கள் வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.