நாடாளுமன்ற தேர்தல் பாதுகாப்பிற்காக 5 கம்பெனி துணை ராணுவம் உதகை வருகை : எஸ்.பி. சண்முகப்பிரியா தகவல்

நீலகிரி : நீலகிரி மக்களவை தொகுதியில் தேர்தல் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்வதற்காக 5 கம்பெனி துணை ராணுவத்தினர் உதகை வரவுள்ளதாக நீலகிரி மாவட்ட எஸ்.பி. சண்முகப்பிரியா தெரிவித்தார்.


நீலகிரி : நீலகிரி மக்களவை தொகுதியில் தேர்தல் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்வதற்காக 5 கம்பெனி துணை ராணுவத்தினர் உதகை வரவுள்ளதாக நீலகிரி மாவட்ட எஸ்.பி. சண்முகப்பிரியா தெரிவித்தார். 

மக்களவை தேர்தல் அடுத்த மாதம் 18-ம் தேதி நடக்கிறது. தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடப்பதால், 40 தொகுதிகளிலும் பாதுகாப்பு பணிகளுக்கு தமிழக போலீசாரை மட்டும் பயன்படுத்த முடியாது. எனவே, தமிழக போலீசார் மட்டுமின்றி, துணை ராணுவ படையினர் மற்றும் தொழிற் பாதுகாப்பு படையினரை பயன்படுத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. 

நீலகிரி மாவட்டத்திற்கு தேர்தல் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகளுக்காக இம்மாதம் இறுதிக்குள் 5 கம்பெனிகள் கொண்ட 200-க்கும் மேற்பட்ட துணை ராணுவ படையினர் வர உள்ளனர். இதனிடையே, தற்போது வாகன தணிக்கை, சோதனை சாவடிகளில் உள்ளூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதில், வாகன தணிக்கையில் ஈடுபடும் பறக்கும் படையினர் மற்றும் கண்காணிப்பு படையுடன் இணைந்து துணை ராணுவ படையினர் பணியாற்ற உள்ளனர். மேலும், சோதனை சாவடிகளிலும் பாதுகாப்பு பணிகளுக்காக ஈடுபடுத்தப்படவுள்ளனர். தற்போது, அனைத்து சோதனை சாவடிகள் மற்றும் வாகன தணிக்கைகளில் உள்ளூர் போலீசார் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் கொண்ட குழு இடம் பெற்றுள்ளது. 

இதுகுறித்து நீலகிரி எஸ்.பி., சண்முகப்பிரியா கூறியதாவது:- நீலகிரி மக்களவை தொகுதியில் பாதுகாப்பு பணிகளுக்காக 5 கம்பெனி மத்திய படையினர் கேட்கப்பட்டுள்ளது. இவர்கள், இம்மாதம் வர வாய்ப்புள்ளது. தொடர்ந்து, தேர்தல் முடியும் வரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். வாக்குப்பதிவு முடிந்த பின், வாக்கு எண்ணிக்கை மையங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள், என்றார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...