ஐயோ என்ன வெயில்டா சாமி...! : வெப்பத்தை தணிக்க ஆனந்த குளியல் போடும் முதுமலை வளர்ப்பு யானைகள்

நீலகிரி : கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில், நிலவி வரும் அதிக வெப்பத்தை தணிப்பதற்காக முதுமலை மாயார் ஆற்றில் வளர்ப்பு யானைகள் ஆனந்த குளியல் போட்டன.


நீலகிரி : கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில், நிலவி வரும் அதிக வெப்பத்தை தணிப்பதற்காக முதுமலை மாயார் ஆற்றில் வளர்ப்பு யானைகள் ஆனந்த குளியல் போட்டன.

மலை மாவட்டமான நீலகிரியில் ஆண்டுதோறும் மார்ச் மாதம் முதல் மே மாதம் வரை கோடை காலம் ஆகும். இந்த 3 மாதங்களில் வெயிலின் தாக்கம் அதிகம் இருக்கும். இருப்பினும், சமவெளிப் பகுதியை விட சற்று குறைவாக வெயில் காணப்படும். ஆனால், இந்த ஆண்டு வழக்கத்திற்கு மாறாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இதில், மசினகுடி மற்றும் அதனை ஒட்டி உள்ள முதுமலை புலிகள் காப்பக பகுதியில், பகல் நேரங்களில் அளவுக்கு அதிகமான வெப்பம் பதிவாகி வருகிறது. இதனால், மனிதர்கள் மட்டுமின்றி வனவிலங்குகளும் அவதிப்பட்டு வருகின்றன.



முதுமலை புலிகள் காப்பகத்தில் தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாம் உள்ளது. இங்குள்ள வளர்ப்பு யானைகளும் கடும் வெயிலினால் தவித்து வருகின்றன. இதனால், வளர்ப்பு யானைகள் அங்குள்ள மாயார் ஆற்றின் கரையில் உள்ள மரங்களில் கட்டி வைக்கப்படுகின்றன. மேலும், வளர்ப்பு யானைகளுக்கு தேவையான பசுந்தீவனங்களும் அதே இடத்துக்கு கொண்டு சென்று வழங்கும் பணியும் நடைபெற்று வருகிறது. அனைத்து யானைகளும் முழு ஓய்வில் உள்ளன. யானைகளுக்கு எந்த பணிகளும் வழங்கப்படுவதில்லை. காலை மற்றும் மாலை நேரங்களில் சிறப்பான மருத்துவ சிகிச்சைகள் மற்றும் ஊட்டச்சத்து மாத்திரைகள், லேகியங்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதனால், யானைகள் உடல் ஆரோக்கியத்துடன் உள்ளன.

இந்த நிலையில், வெப்பம் அதிகரிக்கும்போது, யானைகளை பாகன்கள் மாயார் ஆற்றில் குளிக்க வைக்கின்றனர். யானைகளும் வெப்பத்தை தணிக்க ஆற்றில் ஆனந்த குளியல் போடுகின்றன. துதிக்கையால் தண்ணீரை உடல் மீது ஊற்றியும், தண்ணீருக்குள் படுத்தும் உடல் வெப்பத்தை தணித்து கொள்கின்றன. இதனை சுற்றுலா பயணிகளும் ஆர்வத்துடன் கண்டு ரசித்துச் செல்கின்றனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...