முத்திரை சீட்டு வாக்கு பெட்டி நடைமுறையை மீண்டும் அமல்படுத்த வேண்டும் : பதாகைகள் ஏந்தியபடி வந்து ஆட்சியரிடம் மனு அளித்த சமூக ஆர்வலர்

கோவை : நாடாளுமன்றத் தேர்தலில் முத்திரை சீட்டு வாக்குபெட்டி நடைமுறையை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என பதாகைகள் ஏந்தியபடி வந்து சமூக ஆர்வலர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.


கோவை : நாடாளுமன்றத் தேர்தலில் முத்திரை சீட்டு வாக்குபெட்டி நடைமுறையை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என பதாகைகள் ஏந்தியபடி வந்து சமூக ஆர்வலர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.

கோவை உடையாம்பாளையம் காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் லெனின்ராஜ் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு ஒன்றை அளித்தார். இது குறித்து அவர் கூறுகையில், "எல்லா தேர்தல்களிலும் ஜனநாயக கடமையாக தவறாமல்தான் வாக்களித்து வருகின்றேன். தேர்தல் ஆணையம் இயந்திர வாக்குப்பதிவில் முறைகேடுகளும் நடக்காது என விளக்கமளித்தாலும், உலகில் பல்வேறு நாடுகள், இதில் ஊழல் நடக்க வாய்ப்பு உள்ளதாக தொடர்ந்து கூறி வருகிறது. 

எனவே, இதனை தவிர்த்து பழைய முத்திரை சீட்டு வாக்கு அளிக்கவே விரும்புகிறேன். மேலும், இதனை விரும்புபவர்களும் உள்ளனர். தேர்தல் ஆணையம் மாற்று யோசனை செய்து, அவரவர் விருப்பத்திற்கு ஏற்றாற்போல் வாக்களிக்க அனுமதிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி மனு அளித்துள்ளேன். இப்படி செய்வதன் மூலம் அதிக வாக்குகள் பதிவாகவும் வாய்ப்புகள் உள்ளது," என தெரிவித்தார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...