கோவை : மேட்டுப்பாளையம் மகாஜன மேல்நிலைப் பள்ளி நூற்றாண்டு விழாவை ஒட்டி, 2000-2002 ஆண்டில் அப்பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் சந்தித்துக் கொண்ட இனிமையான நிகழ்ச்சி நடைபெற்றது.
கோவை : மேட்டுப்பாளையம் மகாஜன மேல்நிலைப் பள்ளி நூற்றாண்டு விழாவை ஒட்டி, 2000-2002 ஆண்டில் அப்பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் சந்தித்துக் கொண்ட இனிமையான நிகழ்ச்சி நடைபெற்றது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மகாஜன மேல்நிலைப் பள்ளி நூற்றாண்டு விழாவை ஒட்டி, இப்பள்ளியில் 2000-2002 ஆம் ஆண்டுகளில் பயின்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு, ஆசிரியர்களுக்கு மரியாதை செய்தல், பள்ளிக்கு கைமாறு செய்தல் நிகழ்ச்சி மேட்டுப்பாளையம் ஐஸ்வர்யா மகாலில் நடைபெற்றது. 'காலடித் தடங்களை தேடி' என்ற பெயரில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மகாஜன மேல்நிலைப் பள்ளியில் ஓய்வுபெற்ற ஆசிரியர்கள், தற்போது பணியில் உள்ள ஆசிரியர்கள், பள்ளியின் முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டனர். நிகழ்வில் பங்கேற்ற முன்னாள் இந்நாள் ஆசிரியர்கள் அனைவருக்கும் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.