Breaking : வேலூரில் தி.மு.க. பிரமுகருக்கு சொந்தமான குடோனில் மூட்டை மூட்டையாக பணம் : தி.மு.க. பொருளாளர் துரைமுருகனுக்கு தொடர்பா..?

வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே தி.மு.க. பிரமுகருக்குச் சொந்தமான சிமெண்ட் குடோனில் மூட்டை, மூட்டையாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த பணத்தை வருமான வரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.


வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே தி.மு.க. பிரமுகருக்குச் சொந்தமான சிமெண்ட் குடோனில் மூட்டை, மூட்டையாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த பணத்தை வருமான வரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

வேலூர் மாவட்டத்தின் பள்ளிகுப்பம் பகுதியில் உள்ள தி.மு.க. பிரமுகர் பூஞ்சோலை என்பவருக்குச் சொந்தமான சிமெண்ட் குடோனில் சட்ட விரோதமாக பணம் பதுக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் அதிகாரிகள் இன்று சிமெண்ட் குடோனில் சோதனை மேற்கொண்டனர். சோதனையில் மூட்டை, மூட்டையாக பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதில், ஒவ்வொரு மூட்டையிலும் வார்டு எண்கள் எழுதப்பட்டு வைக்கப்பட்டிருந்ததால், அவை அரசியல் கட்சிகள் சார்பில் பொதுமக்களுக்கு விநியோகம் செய்ய வைக்கப்பட்டிருந்தவை என்று தெரியவந்துள்ளது. 

பணம் எண்ணுவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. மொத்தமாக ரூ.15 கோடி அளவில் பணம் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. பெரிய அளவிலான தொகை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதால், இது கண்டிப்பாக அரசியல் பிரபலத்தின் பணமாகத் தான் இருக்க முடியும் என்று கூறப்படுகிறது. 

கடந்த 29, 30 ஆகிய தேதிகளில் தி.மு.க. பொருளாளா் துரைமுருகன் வீடு, பள்ளி, கல்லூரி உள்ளிட்ட பகுதிகளில் வருமான வரித்துறையினா் சோதனை நடத்திய நிலையில், தற்போது மூட்டை மூட்டையாக பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதால், அதற்கும், இந்த சம்பவத்திற்கும் தொடர்பு இருக்கலாமோ என்ற நோக்கத்தில் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இதனைத் தொடர்ந்து, வேலூரில் மேலும் சில பகுதிகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொள்வதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், அதிக அளவில் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதால், இந்த தொகுதியில் தேர்தல் நிறுத்தப்படுமோ என்ற கேள்வி எழுந்துள்ளது. 

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...