நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க மற்றும் பா.ஜ.க கூட்டணிக்கு ஆதரவு : கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம் அறிவிப்பு

கோவை : வரும் நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க மற்றும் பா.ஜ.க. கூட்டணிக்கு முழு ஆதரவு அளிப்பதாக கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் என்.ஏ.பொன்னுசாமி இன்று கோவையில் தெரிவித்துள்ளார்.


கோவை : வரும் நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க மற்றும் பா.ஜ.க. கூட்டணிக்கு முழு ஆதரவு அளிப்பதாக கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் என்.ஏ.பொன்னுசாமி இன்று கோவையில் தெரிவித்துள்ளார்.



இது குறித்த செய்தியாளர் சந்திப்பு கோவை பிரஸ் கிளப் அரங்கில் நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களிடம் என்.ஏ. பொன்னுசாமி பேசியதாவது :- கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டம் கடந்த வாரம் கோவையில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் எந்த அணிக்கு ஆதரவு அளிப்பது என்று விவாதிக்கப்பட்டது. அதனடிப்படையில், அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாக கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு அ.தி.மு.க. அரசு ஆதரவளிப்பதை முன்னிட்டும், விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்றுக் கொள்வதன் அடிப்படையிலும், விவசாயிகள் அனைவரும் அ.தி.மு.க. கூட்டணிக்கு முழு ஆதரவு அளிக்கவுள்ளோம், என்றார்.

மேலும், விவசாயிகள் சங்கத்தின் மூத்த தலைவர் ஐயா.நாராயணசாமிக்கு நினைவு மண்டபம், அவினாசி -அத்திக்கடவு திட்டம் ஆகியவற்றை அ.தி.மு.க. அரசு நிறைவேற்றியுள்ளது. விவசாயிகளின் கோரிக்கைகளான ஆனைமலை - நல்லாறு திட்டம், 60 வயதான விவசாயிகளுக்கு ஓய்வூதியமாக மாதம் ரூ.5,000 வழங்குதல், அகால மரணம் அடையும் விவசாயிகளுக்கு 10 லட்சம் நிதி உதவி உள்ளிட்ட கோரிக்கைகளை பரிசீலித்து நிறைவேற்றுவதாக அ.தி.மு.க. கூட்டணி தெரிவித்துள்ளது. இதனடிப்படையில், சங்கத்தின் சார்பில் அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. கூட்டணிக்கு ஆதரவு அளிக்கிறோம், என அவர் கூறினார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...