அதிகக் கட்டணம் வசூலிப்பதாக அமிர்தா வித்யாலயா பள்ளி மீது மாவட்ட ஆட்சியரிடம் பெற்றோர்கள் புகார்

கோவை : பாடப்புத்தகம், காலணி, விளையாட்டு சீருடை உள்ளிட்ட பொருட்களை அதிக கட்டணத்திற்கு வாங்க கட்டாயப்படுத்துவதாக அமிர்தா வித்யாலயா பள்ளி நிர்வாகம் மீது பெற்றோர்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.


கோவை : பாடப்புத்தகம், காலணி, விளையாட்டு சீருடை உள்ளிட்ட பொருட்களை அதிக கட்டணத்திற்கு வாங்க கட்டாயப்படுத்துவதாக அமிர்தா வித்யாலயா பள்ளி நிர்வாகம் மீது பெற்றோர்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.

கோவை நல்லம்பாளையம் பகுதியில் உள்ள அமிர்தா வித்யாலயா பள்ளியில் வரும் 2019-20ம் ஆண்டிற்கான பாட புத்தகங்களை வழங்க வேண்டும் எனில், காலணி, விளையாட்டு சீருடை உள்ளிட்ட பொருட்களை அதிக கட்டணத்திற்கு வாங்க கட்டாயப்படுத்துவதாக கூறி மாணவர்களின் பெற்றோர் மாவட்ட ஆட்சியரிடம் உரிய நடவடிக்கை எடுக்ககோரி மனு அளித்தனர். 

இதனை தொடர்ந்து, பத்திரிக்கையாளர்களிடம் மாணவர்களின் பெற்றோர் கூறுகையில், “கடந்த ஆண்டும் இதேபோல் பொருட்களை வாங்க கட்டாயப்படுத்தினர். 2,500ரூபாய்க்கு வாங்கப்பட்ட பொருட்களை இந்த ஆண்டு 5,000 ரூபாய் என அதிக விலை நிர்ணயம் செய்து உள்ளனர். தேர்வு கட்டணத்தை ஒன்று முதல் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு 6,000 ரூபாய் அதிகரித்து உள்ளனர். மேலும், 10ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இதுவரை மூன்று தவணைகளாக பணம் செலுத்தபட்டு வந்த நிலையில், ஒரே தவணையில் பணம் கட்ட சொல்லி நிர்பந்திக்கின்றனர். எனவே, அதிகக் கட்டணம் வசூலிக்கும் பள்ளி நிர்வாகத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்துள்ளோம்,” என தெரிவித்தனர்.

இந்த மனுவை பெற்றுக் கொண்ட ஆட்சியர், முதன்மை கல்வி அலுவலரை அனுப்பி விசாரணை நடத்த்கப்படும் என உறுதி அளித்ததாக அவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...