கோவை : பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் விவரத்தை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய கோவை மாவட்ட எஸ்.பி. பாண்டியராஜனை தமிழக அரசு அதிரடியாக பணியிடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது.
கோவை : பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் விவரத்தை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய கோவை மாவட்ட எஸ்.பி. பாண்டியராஜனை தமிழக அரசு அதிரடியாக பணியிடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது.
பொள்ளாச்சி விவகாரத்தில் புகார் அளித்த பெண்ணின் பெயர் உள்ளிட்ட அடையாளத்தை வெளியிட்டதாக கோவை மாவட்ட எஸ்.பி.பாண்டியராஜன் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்பினர் வலியுறுத்தி வந்தனர். மேலும், பொள்ளாச்சி பாலியல் கொடூரம் தொடர்பாக புகார் அளித்த பெண்ணின் அடையாளத்தை வெளியிட்ட கோவை மாவட்ட ஊரக காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க தமிழக டி.ஜி.பி.க்கு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி உச்ச நீதுமன்றத்திலும். வழக்கு தொடரப்பட்டது. அதேபோல, கோவை எஸ்.பி. பாண்டியராஜன் மீது நீதிமன்ற உத்தரவுப்படி, அரசு நடவடிக்கை எடுக்கலாம் என்றும் , அது தொடர்பாக அறிக்கை அளித்தால் போதுமானது என. தமிழக தேர்தல் ஆணையமும் அறிவித்திருந்தது.
இந்த நிலையில், பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் விவரத்தை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய கோவை மாவட்ட எஸ்.பி. பாண்டியராஜனை தமிழக அரசு அதிரடியாக பணியிடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது. அவர், தற்போது காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். அதேபோல, கோவை மாவட்ட போக்குவரத்து துணை ஆணையராக இருந்த சுஜித்குமார், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.