நீலகிரியில் தொடங்கியது கோடை சீசன் : சுற்றுலாப் பயணிகளின் கண்களுக்கு விருந்து படைக்கும் உதகை ரோஜா பூங்கா

நீலகிரி : நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் இன்று தொடங்கும் நிலையில், உதகை ரோஜா பூங்காவில் பூத்துள்ள பல வண்ண ரோஜா மலர்கள் சுற்றுலாப் பயணிகளின் கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.


நீலகிரி : நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் இன்று தொடங்கும் நிலையில், உதகை ரோஜா பூங்காவில் பூத்துள்ள பல வண்ண ரோஜா மலர்கள் சுற்றுலாப் பயணிகளின் கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது. 



உதகை ரோஜா பூங்காவில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரோஜா வகைகள் உள்ளன. 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரோஜா செடிகள் உள்ளன. ஆண்டுதோறும் கோடை சீசனின் போது, இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளை மகிழ்விப்பதற்காகவும், ரோஜா கண்காட்சி நடத்துவதற்காகவும் இப்பூங்கா பிப்ரவரி மாதம் முதலே தயார் செய்யப்படும். வழக்கம் போல், இம்முறையும் கடந்த மூன்று மாதங்களுக்கு முன் சில பாத்திகளில் உள்ள செடிகள் கவாத்து செய்யப்பட்டன. கடந்த மாதம் பூங்காவில் உள்ள பெரும்பாலான ரோஜா செடிகள் கவாத்து செய்யப்பட்டுள்ளன. அவைகளை பராமரிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மூன்று மாதங்களுக்கு முன் கவாத்து செய்யப்பட்ட ரோஜா செடிகளில் தற்போது மலர்கள் பூத்துள்ளன. பல வண்ணங்களில் பூத்துக்குலுங்கும் இந்த ரோஜா மலர்கள் சுற்றுலாப் பயணிகளை கவர்ந்து வருகிறது. 



தற்போது, 10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் முடிந்த நிலையில், உதகைக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை பல மடங்கு உயரும். 

மேலும், இன்று முதல் கோடை சீசன் துவங்குகிறது. இதனால், கோடை சீசனுக்கு உதகைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் இந்த பல வண்ண ரோஜா மலர்களை கண்டு ரசித்து செல்கின்றனர். சமவெளிப் பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படும் நிலையில், கண்களுக்கு குளிர்ச்சியை தரும் வகையில் பூத்துள்ள இந்த ரோஜா மலர்களை காண சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...