Breaking : சிறுமி கொலை வழக்கு குற்றவாளிக்கு ஏப்.,15-ம் தேதி வரை நீதிமன்ற காவல் : இன்று அதிகாலை ரகசியமாக மத்திய சிறையில் அடைப்பு

கோவை : சிறுமி பாலியல் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட குற்றவாளியை, பத்திரிக்கையாளர்களின் கண்களை மறைத்து, இன்று அதிகாலை 4.30 மணியளவில் மகிளா நீதிமன்ற நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தி, போலீசார் சிறையில் அடைத்தனர்.


கோவை : சிறுமி பாலியல் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட குற்றவாளியை, பத்திரிக்கையாளர்களின் கண்களை மறைத்து, இன்று அதிகாலை 4.30 மணியளவில் மகிளா நீதிமன்ற நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தி, போலீசார் சிறையில் அடைத்தனர்.

நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள சிறுமி பாலியல் கொலை வழக்கில் கிட்டத்தட்ட ஆறு நாட்களுக்குப் பிறகு, நடத்தப்பட்ட விசாரணையில் சந்தோஷ் குமார் குற்றவாளி என தெரியவந்துள்ளது. மேலும், சந்தோஷ் குமார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அவரை சிறையில் அடைக்க துடியலூர் போலீசார் மற்றும் தனிப்படையினர் கோவை மாவட்ட அரசு மருத்துவமனையில்

வழக்கமான மருத்துவ பரிசோதனை செய்து நீதிபதி முன் ஆஜர்படுத்த இருந்தனர். இதையடுத்து, நேற்று (ஞாயிறு) மதியம் முதல் இரவு 11.45 மணி வரை பத்திரிக்கையாளர்கள் பந்தய சாலை அருகே உள்ள நீதிபதி குடியிருப்பு முன்பு செய்தி சேகரிக்க காத்திருந்தனர். அதேபோல, இன்னும் சில பத்திரிக்கையாளர்கள் கோவை அரசு மருத்துவமனையிலேயும் காத்திருந்தனர். ஆனால், குற்றவாளி சந்தோஷ்குமாரை கடைசிவரை அழைத்து வரவில்லை. இதையடுத்து, செய்தியாளர்கள் அனைவரும் கலைந்தனர். 

இந்த நிலையில், போலீசார் திடீரென தனியார் காரில் மஃப்டி போலீஸார் உதவியுடன் குற்றவாளி சந்தோஷ் குமாரை கோவை அரசு மருத்துவமனையில் உள்ள ஒரு வார்டுக்கு அழைத்து வந்தனர். இங்கு ஏற்கனவே தயார் நிலையில் இருந்த அறிக்கையில் விவரங்களை பதிவு செய்து உடனடியாக மருத்துவ பரிசோதனை செய்து, அவரை அதிகாலை சுமார் 4;30 மணியளவில் மாவட்ட மகிளா நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தினர். அப்போது, ஏப்ரல் 15-ம் தேதி வரை குற்றவாளிக்கு நீதிமன்ற காவல் விதித்து நீதிபதி உத்தரவிட்டதையடுத்து, கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

மேலும், இந்த குற்றவாளியை ஏன் இவ்வளவு மர்மமாக அழைத்துச் செல்ல வேண்டும். ஏன் பத்திரிக்கையாளர்கள் கண் முன்பு குற்றவாளியை காட்டவில்லை என்ற பல கேள்விகள் பொதுமக்கள் மத்தியில் நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...