நீலகிரி (தனி) படுகதேச பார்ட்டி வேட்பாளருக்கு நாம் தமிழர் கட்சி ஆதரவு

நீலகிரி : நாடாளுமன்ற தேர்தலில் நீலகிரி (தனி) தொகுதியில் சுயேட்சைக்காக போட்டியிடும் படுகதேச பார்ட்டியின் வேட்பாளருக்கு நாம் தமிழர் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.

நீலகிரி : நாடாளுமன்ற தேர்தலில் நீலகிரி (தனி) தொகுதியில் சுயேட்சைக்காக போட்டியிடும் படுகதேச பார்ட்டியின் வேட்பாளருக்கு நாம் தமிழர் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக நாம் தமிழர் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் நீலகிரி (தனி) தொகுதியில் நாம் தமிழர் கட்சி போட்டியிட முடியாத சூழலில், தங்களது உலகார்ந்த ஆதரவை சுயேட்சைக்காக போட்டியிடும் படுகதேச பார்ட்டியின் வேட்பாளருக்கு வழங்க இருக்கிறது. அக்கட்சியின் சார்பில் ஊன்றுகோல் (கைத்தடி) சின்னத்தில் சுயேட்சையாகப் போட்டியிடும் வேட்பாளர் மா.சுப்பிரமணியின் வெற்றிக்காக நாம் தமிழர் கட்சியினர் முழு வீச்சில் செயல்பட வேண்டும். கட்சியின் அனைத்து நிலைப்பொறுப்பாளர்களும், உறுப்பினர்களும் படுகதேச பார்ட்டியின் வேட்பாளரின் வெற்றிக்காக உழைக்க வேண்டும், இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...