கோவை : கோவையில் தேர்தல் பறக்கும் படையினரால் இதுவரை ரூ. 1.75 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், கோவை மாவட்டத்தில் உரிய ஆவணங்களின்றி ரூ. 50,000-க்கு மேல் கொண்டு செல்லப்படும் ரொக்கம் பறக்கும் படை மற்றும் கண்காணிப்பு குழுவினரால் பறிமுதல் செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட கருவூலத்தில் ஒப்படைக்கப்படும்.
இன்று நடத்தப்பட்ட சோதனையில், உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு வரப்பட்ட ரூ. 3,12,89,655 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், ஏற்கனவே, பறிமுதல் செய்யப்பட்ட தொகையில் ரூ. 1,37,55,380 ரொக்கமும், 197 பட்டுப் புடவைகளும் விடுவிக்கப்பட்டன.
இதன் மூலம், கடந்த 11-ம் தேதி முதல் இன்று (மார்ச் 31) வரை நடத்தப்பட்ட சோதனையின் போது, எவ்வித ஆவணங்களுமின்றி கொண்டு செல்லப்பட்ட 1 கோடியே 75 லட்சத்து 34 ஆயிரத்து 275 ரூபாய் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டு, கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும், 80 பட்டுச் சேலைகளும், 1,769 மதுபாட்டில்களும், ரூ. 30,000 மதிப்புள்ள 15 கிலோ குட்கா போதைப் பொருட்களும் மற்றும் ஏர்பிஸ்டல் ஒன்றும் சம்பந்தப்பட்ட எல்லை காவல்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.