அவிநாசி - அத்திக்கடவு திட்டத்தை நிறைவேற்றிய அ.தி.மு.க.வை வெற்றி பெறச் செய்ய வேண்டும் : நீலகிரி வேட்பாளர் தியாகராஜன் வேண்டுகோள்

கோவை : 60 ஆண்டுகால கனவு திட்டத்தமான அவிநாசி - அத்திக்கடவு திட்டத்தை நிறைவேற்றியும், தடையற்ற மின்சாரத்தையும் வழங்கி வரும் அ.தி.மு.க.விற்கு வாக்களித்து வெற்றிபெற செய்ய வேண்டும் என அன்னூர் பகுதியில் அ.தி.மு.க நீலகிரி வேட்பாளர் தியாகராஜன் வேண்டுகோள் விடுத்தார்.

கோவை : 60 ஆண்டுகால கனவு திட்டத்தமான அவிநாசி - அத்திக்கடவு திட்டத்தை நிறைவேற்றியும், தடையற்ற மின்சாரத்தையும் வழங்கி வரும் அ.தி.மு.க.விற்கு வாக்களித்து வெற்றிபெற செய்ய வேண்டும் என அன்னூர் பகுதியில் அ.தி.மு.க நீலகிரி வேட்பாளர் தியாகராஜன் வேண்டுகோள் விடுத்தார்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்த அன்னூர் ஒன்றிய பகுதிகளில் இன்று அ.தி.மு.க.வின் நீலகிரி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் தியாகராஜன் கூட்டணி கட்சிகளுடன் சென்று கிராமம் கிராமமாக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். மூக்கனூர், வடக்கலூர், பொகலூர், கைக்காட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு சென்ற அவர், தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். வேட்பாளருக்கு அந்த கட்சி தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். 



இதனையடுத்து, பிரச்சாரம் மேற்கொண்ட தியாகராஜன் பொதுமக்களிடம் பேசுகையில், “ஆண்டுதோறும் கடும் வறட்சியால் பாதிக்கப்படும் அன்னூர், அவிநாசி ஆகிய இந்த பகுதியின் 60 ஆண்டு கோரிக்கையான அவிநாசி - அத்திக்கடவு திட்டத்தை அ.தி.மு.க அரசு தான் தற்போது நிறைவேற்றியுள்ளது. அதற்கான பணிகளுக்கு உடனடியாக 1,632 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி பணிகளை துவங்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் ஓராண்டுக்குள் பயன்பாட்டிற்குள் கொண்டுவர பாடுபடுவேன் என உறுதியளித்து வாக்கு சேகரித்தார். மேலும், கிராமங்கள் தோறும் அடிப்படை வசதிகளான குடிநீர்,சாலை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது. தி.மு.க ஆட்சியில் போல் இல்லாமல் தற்போது அ.தி.மு.க அரசு தடையற்ற மின்சாரம் வழங்கி வருகிறது. இந்த நல்லாட்சி மத்தியிலும், மாநிலத்திலும் தொடர்ந்திட இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும், என கேட்டு பிரச்சாரம் மேற்கொண்டார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...