Breaking: சிறுமி கொலை விவகாரம் : முக்கியக் குற்றவாளி சந்தோஷுடன் இருந்த மற்றொரு நபர் விசாரணை வளையத்திற்குள் இருப்பவரா..?

கோவை : சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட விவகாரத்தில் மருத்துவ பரிசோதனைக்காக அழைத்து செல்லப்பட்ட முக்கியக் குற்றவாளி சந்தோஷுடன் மருத்துவமனை வந்தவரும் குற்றவாளியா..? என்ற கேள்வி எழுந்துள்ளது.

கோவை : சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட விவகாரத்தில் மருத்துவ பரிசோதனைக்காக அழைத்து செல்லப்பட்ட முக்கியக் குற்றவாளி சந்தோஷுடன் மருத்துவமனை வந்தவரும் குற்றவாளியா..? என்ற கேள்வி எழுந்துள்ளது.

பன்னிமடை அருகே சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில், 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் கடந்த 6 நாட்களாக விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில், தொண்டாமுத்தூரை சேர்ந்த சந்தோஷ் குமார் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். மேலும், டி.என்.ஏ. பரிசோதனையில், சந்தோஷ்குமார் குற்றவாளி என்பது நிரூபணமானது.

முன்னதாக, நேற்று மாலை சுமார் 5 மணியளவில் கோவை அரசு மருத்துவமனையில் உள்ள "எல்லோ ஜோன்" தீவிர சிகிச்சை பிரிவிற்கு காவல்துறையினர் சிறுமி பாலியல் விவகாரத்தில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி சந்தோஷ்குமார் ரகசியமாக அழைத்து வரப்பட்டார். இது மருத்துவமனையில் இருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியது. அதில், குற்றவாளி சந்தோஷுடன் இன்னொரு நபரும் மருத்துவமனைக்கு மருத்துவப் பரிசோதனைக்கு அழைத்து வரப்பட்டிருந்தார். அந்த நபரும் இந்தக் கொலை வழக்கில் தொடர்புடைய நபரா..? அல்லது காவல் சீருடையில் இல்லாத போலீஸ்காரரா..? என்ற கேள்வி எழுந்துள்ளது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...