2019 – கோவை தேர்தல் களம்: குக்கர் சின்னத்தில் போட்டியிடும் அதிமுக நிர்வாகி

பொள்ளாச்சி நாடாளுமன்ற தேர்தல் களத்தில் 14 வேட்பாளர்கள் உள்ளனர்.

பொள்ளாச்சி நாடாளுமன்ற தேர்தல் களத்தில் 14 வேட்பாளர்கள் உள்ளனர். அதிமுக சார்பில் நாடாளுமன்ற உறுப்பினரான மகேந்திரன் மீண்டும் போட்டியிடுகிறார். திமுக சார்பில் கு.சண்முக சுந்தரம் களம் காண்கிறார். அமமுக சார்பில் சு.முத்துக்குமாரும், நாம் தமிழர் கட்சி சார்பில் சனுஷா, மக்கள் நீதி மய்யம் சார்பில் மூகாம்பிகா ஆகியோரும் போட்டியிடுகின்றனர். 

இந்நிலையில் நேற்று இறுதி வேட்பாளர் பட்டியல் மற்றும் ஒதுக்கப்பட்ட சின்னங்கள் விவரங்கள் வெளியிடப்பட்டது. அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சுயேட்சையாக பரிசு பெட்டகம் சின்னத்தில் போட்டியிடும் நிலையில், மற்றொரு சுயேட்சைக்கு பிரஷர் குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் ஆச்சரியமான விஷயம் என்னவெனில், அமமுக வேட்பாளரின் பெயரும் முத்துக்குமார். பிரஷர் குக்கர் சின்னத்தில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளரின் பெயரும் முத்துக்குமார். ஒரே ஒரு வித்தியாசம் என்னவெனில், இனிசியல் மட்டுமே.



ஒவ்வொரு தொகுதியிலும் எதொவொரு ஆதாய நோக்கத்தில் முக்கிய கட்சிகளின் வேட்பாளர் பெயர் கொண்ட, வேட்பாளர்கள் சுயேட்சையாக களமிறங்குவது வழக்கம். ஆனால் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் சு.முத்துகுமாருக்கு போட்டியாக, அதிமுக நிர்வாகி சி.முத்துக்குமார் களமிறங்கியுள்ளார்.

பொள்ளாச்சி ஏரிப்பட்டி கிராமத்தை சேர்ந்த சி.முத்துக்குமார் பத்து ஆண்டுகளாக அதிமுக உறுப்பினராக உள்ளார். அம்மா பேரவை ஒன்றிய பொருளாராக உள்ள இவர், சுயேட்சையாக இத்தேர்தலில் போட்டியிடுகிறார். இதற்கு ஒரே காரணம் அமமுக வேட்பாளரின் பெயரும், இவரின் பெயரும் ஒன்றாக இருப்பதே. வேட்பு மனு தாக்கல் செய்ததோடு சரி. எங்கும் வாக்கு சேகரிப்பில் ஈடுபடவோ, பிரச்சாரம் செய்யாவோ இல்லை. அதிமுக அலுவலகத்திலேயே இருப்பதாக கூறப்படுகிறது.

வாக்கு இயந்திரத்தில் அடுத்தடுத்து ஒரே வேட்பாளர் பெயர். அமமுக விரும்பிய குக்கர் சின்னமும், அமமுக பெற்ற பரிசு பெட்டகமும் அடுத்தடுத்து வருகின்றன. இது வாக்காளர்களை குழப்பக்கூடும். வாக்குகளை பிரிக்கவும், வாக்களார்களை குழப்பவும் இதுபோல செய்திருப்பதாக புகார் எழுந்துள்ளது. 

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அமமுக வேட்பாளர் சு.முத்துக்குமார், தேர்தல் ஆணையம் திட்டமிட்டு குக்கர் சின்னத்தை தனது பெயருடைய மற்றொரு சுயேட்சைக்கு வழங்கியுள்ளதாக குற்றம்சாட்டினார். எங்களுக்கு சின்னம் பெரிதல்ல எனவும், டிடிவி தினகரனின் முகமே முக்கியமெனவும் கூறிய அவர், ஆளுங்கட்சியின் எண்ணம் நிறைவேறாது என தெரிவித்தார். இரண்டே நாளில் பரிசு பெட்டகம் சின்னம் மக்களிடம் ரீச் ஆகியிருப்பதாகவும், பரிசு பெட்டக சின்னத்தில் வெற்றி பெறுவோம் எனவும் அவர் தெரிவித்தார். மேலும் குக்கர் சின்னம் பிரபலமானது போல, தேர்தலுக்கு பிறகு பரிசு பெட்டகம் சின்னமும் பிரபலமாகும் எனவும் அவர் கூறினார்.

தேர்தல் களத்தில் பெயர் மற்றும் சின்னங்கள் குழப்பம் அமமுகவின் முன்பு எழுந்துள்ள சவால். இதனை அக்கட்சி சமாளிக்குமா என்பது தேர்தல் முடிவுகள் வரும் போதே தெரியும்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...