கோவை : பன்னிமடையில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய குற்றவாளி சந்தோஷ், அவரது பாட்டியையும் கொலை செய்தாரா..? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
கோவை : பன்னிமடையில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய குற்றவாளி சந்தோஷ், அவரது பாட்டியையும் கொலை செய்தாரா..? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
பன்னிமடை அருகே சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில், 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் கடந்த 6 நாட்களாக விசாரணை மேற்கொண்டனர். இந்த வழக்கு தொடர்பாக 50-க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை செய்தனர். மேலும், சந்தேகத்திற்குரிய 6 நபர்களை தொடர்ந்து விசாரித்ததுடன், குற்றத்தில் தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் சந்தோஷ், துரை, சதிஷ் மற்றும் விஜயகுமார் ஆகியோரை தொடர்ந்து விசாரித்து வந்தனர்.

இந்த நிலையில், தொண்டாமுத்தூரை சேர்ந்த சந்தோஷ் குமார் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் மேலும் மற்ற நபர்களுக்கு தொடர்பு உள்ளதா..? என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த ஐந்து நாட்களாக விசாரணை செய்து வந்த நிலையில், தற்போதுதான் ஆறாவது நாளில் சந்தோஷ் குமார் வன்கொடுமை செய்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார்.
மேலும், சிறுமியின் வாயில் அடைத்து வைத்திருந்த துணியில் இருந்த மண்ணும், சந்தோஷ்குமார் வீட்டில் இருந்த மண்ணும் ஒத்துப்போகியுள்ளது என காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதோடு, சிறுமியின் உடலில் கட்டப்படிருந்த டி-ஷர்ட் சந்தோஷ்குமாருடையது தான் என்றும் கூறப்படுகிறது. இதையெல்லாம் வைத்துத்தான் சந்தோஷ்குமாரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வந்தது.

மேலும், சிறுமி பாலியல் கொலை செய்யப்பட்ட அதே நேரத்தில் தான் சந்தோஷ்குமாரின் பாட்டியும் உயிரிழந்திருக்கிறார். மேலும், இறந்து போன பாட்டி நல்ல உடல் நிலையில் தான் இருந்து உள்ளதாகவும், அந்த பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். அதேபோல, சிறுமி பாலியல் பலாத்காரம் கொலை செய்யப்பட்டதை, அவரது பாட்டி பார்த்திருக்கலாம் என்றும், அதனால் அவரையும் சந்தோஷ்குமார் கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்திலும் போலீஸார் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.