2019 - கோவை தேர்தல் களம் : பொள்ளாச்சி மக்களவை தொகுதி

பொள்ளாச்சி மக்களவை தொகுதி. இயற்கை ஏழில் கொஞ்சும் பகுதி. கோவை மாவட்டத்தில் உள்ள மற்றொரு தொகுதி. கோவை மாவட்டத்தின் புறநகரின் பெரும் பகுதிகளையும், திருப்பூர் மாவட்டத்தின் ஒரு பகுதியையும் உள்ளடக்கிய தொகுதியாக உள்ளது.

பொள்ளாச்சி மக்களவை தொகுதி. இயற்கை ஏழில் கொஞ்சும் பகுதி. கோவை மாவட்டத்தில் உள்ள மற்றொரு தொகுதி. கோவை மாவட்டத்தின் புறநகரின் பெரும் பகுதிகளையும், திருப்பூர் மாவட்டத்தின் ஒரு பகுதியையும் உள்ளடக்கிய தொகுதியாக உள்ளது. 

பொள்ளாச்சி, வால்பாறை, கிணத்துக்கடவு, தொண்டாமுத்தூர், உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் பொள்ளாச்சி தொகுதியில் உள்ளன. இதில் 5 தொகுதிகள் அதிமுக வசமும், மடத்துக்குளம் தொகுதி திமுக வசமும் உள்ளன. தொண்டாமுத்தூரில் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, உடுமலைப்பேட்டையில் கால்நடை துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், பொள்ளாச்சியில் சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் இருப்பதும் இத்தொகுதி முக்கியத்துவம் பெற காரணமாக உள்ளது.

பொள்ளாச்சி தொகுதியில் மொத்தம் 15 இலட்சத்து 569 வாக்காளர்கள் உள்ளனர். அதில் 7 இலட்சத்து 36 ஆயிரத்து 632 ஆண் வாக்காளர்களும், 7 இலட்சத்து 63 ஆயிரத்து 777 பெண் வாக்காளர்களும், 160 திருநங்கைகளும் உள்ளனர்.




தேர்தல் வரலாறு

துவக்கத்தில் பொது தொகுதியாக இருந்த பொள்ளாச்சி தொகுதி, 1977 முதல் 2004 வரை தனி தொகுதியாக இருந்தது. தொகுதி மறுசீரமைப்பில் மீண்டும் பொது தொகுதியாக மாற்றப்பட்டது.

கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி தொகுதி இருந்தாலும், கோயம்புத்தூர் மக்களவை தொகுதியில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. தேர்தல் முடிவுகளும் மாறுபட்டே வந்திருக்கின்றன. கோயம்புத்தூர் தொகுதியில் அதிக வெற்றிகளை பெற்ற கம்யூனிஸ்ட்கள், பொள்ளாச்சி தொகுதியில் ஒரு வெற்றியை கூட பெற்றதில்லை. கோயமுத்தூர் தொகுதியில் ஒரே ஒரு முறை மட்டுமே போட்டியிட்ட அதிமுக, இங்கு அதிக வெற்றிகளை பெற்றுள்ளது. 

இத்தொகுதியின் காங்கிரஸ் மற்றும் திமுக தலா 3 முறையும், மதிமுக 2 முறையும், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன. அதிக வெற்றிகளை பெற்ற கட்சியாக 7 வெற்றிகளுடன் அதிமுக உள்ளது. அதனால் அதிமுக கோட்டை என அறியப்படும் தொகுதி.



முதல் மூன்று தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களான தாமோதரம், ராமகிருஷ்ணன், சி.சுப்பிரமணியம் ஆகியோர் அடுத்தடுத்து வென்றனர். 1967 மற்றும் 1971 தேர்தல்களில் நாராயணன், 1980 தேர்தலில் சி.டி.தண்டபானி ஆகிய திமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். 1977 தேர்தலில் கே.ஏ.ராஜூ. 1984 ல் அண்ணா நம்பி, 1989 மற்றும் 1991 ல் ராஜா ரவிவர்மா, 1998 ல் தியாகராஜன், 2009 ல் சுகுமார் ஆகிய அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். 1996 தேர்தலில் தமாகா வேட்பாளர் கந்தசாமி, 1999 மற்றும் 2004 தேர்தல்களில் மதிமுக வேட்பாளர் சி.கிருஷ்ணன் வெற்றி பெற்றுள்ளார்.

2014 நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் மகேந்திரன், திமுக சார்பில் பொங்கலூர் பழனிசாமி, பாஜக கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன், காங்கிரஸ் சார்பில் செல்வராஜ் ஆகியோர் போட்டியிட்டனர். இதில் அதிமுக வேட்பாளர் மகேந்திரன் ஒரு இலட்சத்து 40 ஆயிரத்து 974 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றார். திமுக வேட்பாளர் பொங்கலூர் பழனிசாமி மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட, கொமதேக ஈஸ்வரன் இரண்டாம் இடம் பிடித்தார்.



இயற்கை வளம்

பொள்ளாச்சி தொகுதி முழுவதுமே இயற்கை வளம் நிறைந்த பகுதி. மேற்கு தொடர்ச்சி மலைகளும், நதிகளும், அணைகளும் அதிகமுள்ள பகுதியாக உள்ளது. அடர்ந்த வனப்பகுதியை கொண்ட ஆனைமலை புலிகள் காப்பகமும் இத்தொகுதிக்குள் வருகிறது. ஆழியாறு அணை, திருமூர்த்தி அணை ஆகியவை மூலம் விளை நிலங்கள் நீர்பாசனம் பெறுகின்றன. குறிப்பாக பிஏபி என்ற பரம்பிக்குளம் - ஆழியாறு திட்டத்தின் மூலம் பாசனம் பெற்று வருகிறது.

பொள்ளாச்சி தொகுதியில் விவசாயம், பெரும்பாலான மக்களின் வாழ்வாதாரமாக இருக்கிறது. குறிப்பாக தென்னை விவசாயத்தில் சிறந்து விளங்கும் பகுதி. தேங்காய் உற்பத்தி, தென்னை நார் தொழிற்சாலைகள் அதிகளவில் வேலை வாய்ப்புகளை கொடுத்து வருகிறது. வால்பாறை பகுதியில் தேயிலை உற்பத்தி முக்கிய வாழ்வாதரமாக விளங்குகிறது.

எதிர்பார்ப்புகளும், கோரிக்கைகளும்:

*நீண்ட காலமாக கிடப்பில் கிடக்கும் ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை செயல்படுத்த வேண்டும்

*தென் மாவட்டங்களுக்கு மீண்டும் இரயில்களை போத்தனூர் - பொள்ளாச்சி வழித்தடத்தில் இயக்குதல்

*கொப்பரை தேய்காய்களுக்கு கட்டுபடியான விலை வழங்க வேண்டும்

*தென்னை மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் உற்பத்தியை ஊக்குவித்தல்

*நீர்ப்பாசன வசதிகளை மேம்படுத்துதல்

*வேலைவாய்ப்புகளை அதிகப்படுத்துதல்

*வால்பாறை தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு

*வால்பாறை மற்றும் தொண்டாமுத்தூர் பகுதியில் வனவிலங்கு பிரச்சணைகளுக்கு தீர்வு

*வால்பாறையை சுற்றுலா தளமாக மேம்படுத்துதல்

*பொள்ளாச்சியை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்

*தென்னை வளர்ச்சி வாரிய மண்டல அலுவலகம் அமைத்தல்

*போத்தனூர் இரயில் நிலையத்தை இரண்டாவது இரயில் முனையமாக மேம்படுத்துதல்

*வெள்ளலூர் குப்பை கிடங்கு பிரச்சணைக்கு தீர்வு 

போட்டியிடும் வேட்பாளர்கள்

அதிமுக சார்பில் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள மகேந்திரன் மீண்டும் போட்டியிடுகிறார். திமுக சார்பில் கு.சண்முகசுந்தரமும், அமமுக சார்பில் சு.முத்துக்குமார், நாம் தமிழர் கட்சி சார்பில் சனுஷா, மக்கள் நீதி மய்யம் சார்பில் மூகாம்பிகா ஆகியோர் போட்டியிடுகின்றனர். சுயேட்சைகள் உட்பட 14 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் மோதுகின்றனர். 

கூட்டணி கட்சிகளின் பலத்தோடு திமுக இம்முறை தேர்தல் களம் காண்கிறது. இருப்பினும் சரியான தலைமையின்மை, அதிமுக தலைவர்களுக்கு உள்ள தனிப்பட்ட செல்வாக்கு திமுகவினருக்கு இல்லாதது உள்ளிட்டவை பலவீனமாக உள்ளது. பொள்ளாச்சி பாலியல் விவகாரம், அதிமுக அணிகள் பிளவு, ஆளுங்கட்சி அதிருப்தி ஆகியவை அதிமுகவிற்கு பாதகமாக கருதப்படுகிறது. அதேசமயம் மகேந்திரனுக்கு மக்களிடம் நல்ல செல்வாக்கு இருக்கிறது. அதிமுக செல்வாக்கு, வாக்கு வங்கி உள்ளிட்டவை சாதகமாக அமையும்.

எப்படி இருப்பினும் திமுக, அதிமுக இடையே கடும் போட்டி இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...