நீலகிரி : கோடை வெயில் அதிகரித்து காணப்படுவதால், குளிர்ச்சியான காலநிலையை அனுபவிப்பதற்காக நீலகிரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து காணப்படுகிறது.

கடந்த 2005-ம் ஆண்டு யுனெஸ்கோ நிறுவனம் நூற்றாண்டு பழமை வாய்ந்த உதகை மலை ரயில் மற்றும் உதகை, குன்னூர் ரயில் நிலையங்களுக்கு பாரம்பரிய அந்தஸ்து வழங்கியது. சர்வதேச அளவில் புகழ்பெற்ற சுற்றுலா தலமான உதகைக்கு வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் அதிக அளவு வருகை தருகின்றனர். அவர்கள் மலை ரயிலில் பயணம் செய்ய ஆர்வம் காட்டுகிறார்கள்.

தமிழகத்தில் பிளஸ்-2, பிளஸ்-1 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு நிறைவடைந்துள்ளது. மேலும், சமவெளி பகுதிகளில் கோடை வெயிலின் தாக்கம் இப்போதே அதிகரித்து விட்டது.
இதனால், குளு, குளு காலநிலை நிலவும் நீலகிரிக்கு சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வர தொடங்கி உள்ளனர். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து உள்ளது.

இவர்கள் மலை ரயிலில் பயணிக்க அதிக ஆர்வம் காட்டுகின்றனர். உதகை மலை ரயிலில் சென்றபடி கேத்தி பள்ளத்தாக்கு, தேயிலை தோட்டங்கள், இயற்கை எழில் மிகுந்த காட்சிகள், பசுமையான மரங்கள், மேகக்கூட்டம் மற்றும் வனவிலங்குகளை சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்க ஏதுவாக இந்த மலைரயில் பயணம் அமையும். இந்த மலை ரயில் பயணம் சுற்றுலாப் பயணிகளுக்கு அதிக மகிழ்சியை தருவதால், எப்போதும் மலைரயில் நிலையங்களில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.