நீலகிரி : உதகையில் உள்ள தேனிலவு படகு இல்லத்தை நிரந்தரமாக புதுப்பிக்க வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உதகையில் சுற்றுலாத்துறை கட்டுப்பாட்டில் தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம் உள்ளிட்ட பல சுற்றுலாத் தலங்கள் உள்ளன. நீலகிரி மாவட்டத்திற்கு வரும் பெரும்பாலான சுற்றுலா பயணிகள் உதகை ஏரிக்கு சென்று, அங்கு படகு சவாரி செய்வது வழக்கம். கோடை காலத்தை அனுபவிக்க அதிகளவு சுற்றுலா பயணிகள் வருகை தரும்போது, அனைவரும் ஒரே சமயத்தில் படகு சவாரி செய்வதில் சிக்கல் ஏற்பட்டது.
மேலும், வெகுநேரம் காத்திருக்க வேண்டிய நிலையும் உருவானது. இந்நிலையில், சுற்றுலா பயணிகள் நலன் கருதி சுற்றுலாத்துறை சார்பில் ஏரியின் மறு கரையில் புதிதாக ஒரு படகு இல்லம் ஒரு கோடி ரூபாய் செலவில் 2001 மற்றும் 2006 காலகட்டத்தில் அமைக்கப்பட்டது.
ஆனால், இவை உதகையில் காணப்படும் குளிர், பனி, மழையினை தாங்கும் அளவு இல்லாததால், இந்த படகு இல்லத்தில் உள்ள மேற்கூரைகள் மற்றும் நடைபாதை ஆகியன பழுதடைந்து காணப்பட்டன.

சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்ய செல்லும் இடம் பழுதடைந்து, கூரைகள் தொங்கி கொண்டிருந்தன, எப்போது வேண்டுமானாலும், இந்த கூரைகள் இடிந்து விழும் நிலையில் இருந்தது. சீசனுக்கு மட்டும் அவ்வப்போது, பழுது பார்த்து வந்தாலும் நிரந்தரமாக தீர்வு காணப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
எனவே, சுற்றுலாப் பயணிகள் நலன் கருதி தேனிலவு படகு இல்லத்தில் கான்கிரிட் கட்டடங்கள் அமைத்து நிரந்தர தீர்வினை ஏற்படுத்த வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.