Breaking : சிறுமி கொலை வழக்கு : கைது செய்யப்பட்டவர்களில் குற்றத்தை ஒப்புக்கொண்ட குற்றவாளி

கோவை : கோவையில் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில், சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார்.


கோவை : கோவையில் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில், சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார்.

பன்னிமடை அருகே சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில், 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் கடந்த 6 நாட்களாக விசாரணை மேற்கொண்டனர். இந்த வழக்கு தொடர்பாக 50-க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை செய்தனர். மேலும், சந்தேகத்திற்குரிய 6 நபர்களை தொடர்ந்து விசாரித்ததுடன், குற்றத்தில் தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் சந்தோஷ், துரை, சதிஷ் மற்றும் விஜயகுமார் ஆகியோரை தொடர்ந்து விசாரித்து வநதனர். 

இந்த நிலையில், தொண்டாமுத்தூரை சேர்ந்த சந்தோஷ் குமார் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் மேலும் மற்ற நபர்களுக்கு தொடர்பு உள்ளதா..? என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த ஐந்து நாட்களாக விசாரணை செய்து வந்த நிலையில், தற்போதுதான் ஆறாவது நாளில் சந்தோஷ் குமார் வன்கொடுமை செய்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார்.

யார் இந்த சந்தோஷ்..? 

தொண்டாமுத்தூர் உளியம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ் குமார். இவரை போலீசார் டி.என்.ஏ பரிசோதனையின் முடிவில் குற்றவாளி என உறுதிபடுத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 



மேலும், இவர் பெயிண்டிங் வேலை செய்து வருவதாகவும், அதேபோல, திருமணம் ஆகி மனைவியிடமிருந்து பிரிந்து வாழ்வதாகவும் விசாரணையில் தெரியவந்தது. மேலும், இவர் தொண்டாமுத்தூர் பகுதியில் இருந்து தனது தாத்தா வீடான பன்னிமடை பகுதிக்கு அடிக்கடி வருவார் எனவும் அந்த பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...