கோவை : நாடாளுமன்ற தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய தேர்தல் விழிப்புணர்வு ரயிலை கோவையில் இன்று மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி வரவேற்றார்.
கோவை : நாடாளுமன்ற தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய தேர்தல் விழிப்புணர்வு ரயிலை கோவையில் இன்று மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி வரவேற்றார்.

இந்திய தேர்தல் ஆணையம் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவரும் 100 சதவிகித வாக்குப்பதிவை செலுத்திட வலியுறுத்தும் வகையில், பல்வேறு சிறப்பு விழிப்புணர்வு முயற்சிகளை மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளது.
நமது மாவட்டத்தில் 100 சதவிகித வாக்குப்பதிவு என்ற இலக்கினை அடைய மாவட்ட நிர்வாகம், மாவட்ட தேர்தல் அலுவலகம் சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு சுவரொட்டிகள், குறும்படங்கள், வீதிநாடகம், தெருக்கூத்துகள், துண்டுப்பிரசுரங்கள், கையெழுத்து இயக்கங்கள் உள்ளிட்டவை நடத்தப்பட்டு வருகின்றது.
அதன்படி, இன்று வாக்குப்பதிவின் மூலம் ஜனநாயக கடமை ஆற்றுவதன் முக்கியத்துவத்தினை வலியுறுத்தும் வகையில், இந்திய தேர்தல் ஆணையத்தால் 100 சதவிகித வாக்களிப்பதன் அவசியத்தினை உணர்த்திடும் விதமாக, நாடு முழுவதும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கென்று தலைநகர் டெல்லியிலிருந்து கேரள மாநிலம் திருவனந்தபுரம் வரை செல்லக்கூடிய தேர்தல் விழிப்புணர்வு ரயில் அறிமுகம் செய்யப்பட்டது.

இந்த ரயிலின் பயணிகள் பெட்டிகள் முழுவதும் வாக்காளர் விழிப்புணர்வு வாசகங்கள் மற்றும் போஸ்டர்கள் ஒட்டப்பட்ட (12626) கேரளா அதிவிரைவு பயணிகள் ரயிலை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான கு.இராசாமணி இன்று அதிகாலை 5.00 மணியளவில் கோவை ரயில் நிலையத்தில் வரவேற்றார். தொடர்ந்து, ரயில் பயிணிகளிடம் வாக்காளர்களின் ஜனநாயக கடமை குறித்து துண்டு பிரசுரங்கள் மற்றும் விழிப்புணர்வு தட்டிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் இராமதுரைமுருகன், வருவாய் கோட்டாட்சியர் (தெற்கு) தனலிங்கம், சிந்தாமணி கூட்டுறவு பண்டக சாலை மேலாண் இயக்குநர் ஆர்.சிவக்குமார், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண் இயக்குநர் எஸ்.ஆர்.வெங்கடேசன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா.நலல் தம்பி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) நாராயணன், மாநராட்சி உதவி ஆணையர்கள் செந்தில் அரசன், செல்வம், கோவை ரயில்நிலைய நிலைய அலுவலர்கள் ஜீமன், யசோதாதேவி ஆகியோர் பங்கேற்றனர்.