பத்மஸ்ரீ விருதுபெற்ற கோவையைச் சேர்ந்த மருத்துவர் ஆர்.வி. ரமணிக்கு பாராட்டு விழா

கோவை : மத்திய அரசின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருதுபெற்ற சங்கரா கண் மருத்துவமனையின் நிறுவனர் ஆர்.வி. ரமணிக்கு கோவையில் பாராட்டு விழா நடைபெற்றது.

கோவை : மத்திய அரசின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருதுபெற்ற சங்கரா கண் மருத்துவமனையின் நிறுவனர் ஆர்.வி. ரமணிக்கு கோவையில் பாராட்டு விழா நடைபெற்றது. 



மருத்துவத்துறையில் பெரும் பங்கு ஆற்றியதற்காக சங்கரா கண் மருத்துவமனையின் நிறுவனர் மற்றும் அறங்காவலர் ஆர்.வி. ரமணிக்கு மத்திய அரசின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருதை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார். இந்த நிலையில், கோவை இந்துஸ்தான் கல்லூரி வளாகத்தில் அவருக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், ஊழல் எதிர்ப்பு இயக்கம், கோ இந்தியா, கொடிசியா, கோவை வழக்கறிஞர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். 



இந்த நிகழ்ச்சியில் பத்மஸ்ரீ விருதுபெற்ற மருத்துவர் ஆர்.வி. ரமணி பேசுகையில், "எங்கள் சங்கரா கண் மருத்துவமனையின் வளர்ச்சிக்கும், இதன் தொண்டு பணிகளுக்கும் பெரிதும் உதவிகரமாக இருந்த கோவையின் முக்கிய தொழில் அமைப்புகளுக்கும், கோவை மக்களுக்கும் எங்களது மருத்துவமனை சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்," என்றார். 



Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...